விண்வெளியில் சுற்றுலா.. அசத்தலாக இறங்கி ஒய்யார நடைபோட்ட அமெரிக்க கோடீஸ்வரர்..

By John A

Published:

மனிதர்கள் தங்களது ஓய்வு நேரத்தைக் கழிக்கவும், குடும்பத்துடன் நேரத்தினைச் செலவிடவும் சுற்றுலா செல்வது வழக்கம். தங்களது பொருளாதார வசதிக்கேற்ப பக்கத்து ஊர் சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, மலைவாசஸ்தலங்கள் சுற்றுலா, வெளிநாட்டுச் சுற்றுலா என பயணிக்கின்றனர். சுற்றுலா மன நிம்மதியையும், புத்துணர்ச்சியையும் தருவதால் உலக அளவில் அதிகம் பணம் கொழிக்கும் துறையாக சுற்றுலா இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு நாடும் சுற்றுலாவை மேம்படுத்தி வெளிநாட்டுப் பயணிகளை தங்கள் பக்கம் ஈர்க்கின்றன.

இப்படி பூமியிலேயே எத்தனை நாள்தான் சுற்றுலா செல்வது. விண்வெளிக்குச் சென்று பார்க்க வேண்டாமா? பல வருடங்களுக்கு முன்பே செவ்வாய் கிரகம் சுற்றுலா, விண்வெளி சுற்றுலா ஆகியவை பேசப்பட்ட போது இதெல்லாம் சாத்தியமா என்று கூறிக் கொண்டிருந்தவர்களை தற்போது வாயடைக்க வைக்கும் விதமாக விண்வெளி சுற்றுலா சென்று முதன் முதலாக விண்வெளியில் நடந்திருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக் மேன்.

ஒரே ஒரு லைக்கால் பறிபோன வேலை.. LinkedIn-ஆல் வந்த வினை.. Reddit தளத்தில் குமுறிய பெண்..

மனிதனால் முடியாதது எதுவே கிடையாது என்பதை நிரூபிப்பது போல் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள். அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் மேற்பார்வையில் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு நிலையத்திலிருந்து SpaceX Polaris Dawn என்ற ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் ஜாரெட் ஐசக் மேன் தலைமையில் நான்குபேர் கொண்ட குழுவினர் பூமியிலிருந்து சுமார் 700 கி.மீ. உயரத்தில் பறந்தனர். அதன்பின் அங்கிருந்து முற்றிலும் ஆக்சிஜன் ஏற்றப்பட்ட பிரத்யேக விண்வெளி உடையுடன் ஸ்லை வாக்கர் என்ற கருவியுடன் முதன் முதலாக விண்வெளி வணிக ரீதியான சுற்றுலாவில் இறங்கியவர் என்ற பெருமையைப் பெற்றார்.

சுமார் 15 நிமிடம் விண்வெளியில் அவர் நடந்து சென்று பூமியைப் பார்வையிட்டார். இதுவரை ஆய்வு நோக்கத்திற்காக மட்டுமே விண்வெளி வீரர்கள் விண்ணுக்குச் சென்ற நிலையில் தற்போது முதன் முறையாக ஒரு சுற்றுலாப் பயணியாக இந்தச் சாதனையை ஜாரெட் ஐசக் மேன் நிகழ்த்தியிருக்கிறார். இந்த விண்வெளி சுற்றுலாவிற்கு ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.