சிலி நாட்டைச் சேர்ந்த எக்ஸெகுவியெல் ஹினோஹோசா என்பவர் தனது வீட்டை சுத்தம் செய்யும் போது, தனது இறந்த தந்தையின் 62 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வங்கிப் பாஸ் புத்தகத்தை கண்டுபிடித்த நிலையில் அதன் பின்னர் அவர் ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறியுள்ளார். ஒரு பாஸ்புக் அந்த இளைஞனின் வாழ்க்கையை மாற்றி, சுமார் ₹10.27 கோடிக்கு அதிபதியாக மாற்றிவிட்டது.
ஹினோஹோசா தனது வீட்டை சுத்தம் செய்யும்போது பிரபல வங்கியிடமிருந்து வழங்கப்பட்ட பாஸ் புத்தகத்தை கண்டெடுத்தார். அந்த பாஸ் புத்தகத்தில், அவரது தந்தை 1960-70களில் வீடு வாங்குவதற்காக பணத்தை டெபாசிட் செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த பணத்தை யாரும் உரிமை கொண்டாடவில்லை என்றும், அந்த பணத்தின் இருப்பை தனது குடும்ப உறுப்பினருக்கும் அவர் தெரிவிக்கவில்லை என்றும் தெரிகிறது.
முதலில், ஹினோஹோசா அந்த பாஸ் புத்தகத்தை மதிப்பற்றதாக நினைத்தார், ஆனால் State Guarantee என்ற வார்த்தைகள் அவரது கவனத்தை ஈர்த்தன. இந்த வார்த்தைகளால் அந்த வங்கி ஹினோஹோசாவுக்கு பணத்தை கொடுக்க ஒப்புக்கொண்டது.
ஹினோஹோசா, பணத்தை கோர வங்கி நிர்வாகத்தை அணுகியபோது, முதலில் அவரது கோரிக்கை மறுக்கப்பட்டது. ஆனால் அவர் சட்டபூர்வமாக வழக்கு தொடர்ந்தார், அந்த பணம் அரசின் உத்தரவாதத்துடன் உள்ளது என வாதிட்டார். ஒரு நீண்ட நீதிமன்ற செயல்முறை நடவடிக்கைக்கு பின் வங்கி நிர்வாகத்திற்கு அந்த பணத்தை வட்டியுடன் திரும்பச் செய்ய ஆணை பிறக்கப்பட்டது, இதனால் ஹினோஹோசாவுக்கு ₹10.27 கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.