இன்றைய காலகட்டத்தில் இயற்கை வெகுவாக மாறி இருக்கிறது. காலமழை மாற்றங்களும் ஒரு நிலையில் இல்லை. அதனால்தான் காலம் கடந்து மழை பெய்வதும் பேரிடர் ஏற்படுவதும் நடக்கிறது. இதற்கு காரணமானவர்கள் மனிதர்கள் தான் என்று உறுதியாக சொல்ல முடியும்.
மனிதர்கள் தங்களது உடல் நலனை முதலில் எடுத்துக் கொண்டார்கள். பாஸ்ட் புட் மோகத்தால் பலவித நோய்கள் இளம் வயது மரணங்கள் ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் மரங்களை அழித்து வீடுகளை உருவாக்கி இயற்கையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பிளாஸ்டிக் உபயோகத்தால் இயற்கை ஒவ்வொரு நாளும் சீரழிந்து போவதை நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
மனிதர்களின் செயலால் புவி வெப்பமடைதல் போன்ற காலநிலை மாற்றங்கள் ஏற்படுவதால் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் இன்னல்களுக்கு உள்ளாகிறது. இதனால் பல வகையான உயிரினங்கள் அழிந்து கொண்டிருக்கிறது. அதன் வரிசையில் தற்போது கழுகுகளும் அழிந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.
இந்த ஐந்து வருடங்களில் பல்லாயிரம் கழுகுகள் அழிந்துவிட்டதாக கூறியிருக்கின்றார்கள். இந்த கழுகுகள் அழித்துவிட்டால் அது மனித உயிருக்கு ஆபத்தாக முடியும். ஏனென்றால் கழுகுகள் மனிதர்களுக்கு நோய் தொற்றுகளை ஏற்படும் எலி போன்ற உயிரினங்களை சாப்பிட்டு விடுகிறது. கழுகுகள் இல்லை என்றால் இது போன்ற உயிரினங்கள் மூலம் தொற்றுநோய் அதிகமாக ஏற்பட்டு மனித இனமே அழியும் அபாயத்தில் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.