ஒருவர் என்னதான் கடினமாக உழைத்தாலும் அதிர்ஷ்டமும் நல்ல நேரமும் உடன் இல்லை என்றால் நிச்சயம் அவர்கள் தொடர்ந்து கஷ்டப்பட்டு கொண்டே தான் இருப்பார்கள். ஆனால் அதே நேரத்தில் எந்த கடின வேலைகளையும் செய்யாமல் மிக ஸ்மார்டாக வேலை செய்து லாட்டரி மூலம் பணம் சம்பாதிப்பவர்களும் இங்கே ஏராளமாக உள்ளனர்.
கேரள மாநிலத்தில் கூட லாட்டரி டிக்கெட் விற்பனைகள் சட்டப்பூர்வமாக இருப்பதால் பலரது வாழ்க்கையும் அடிக்கடி மாறி லட்சாதிபதியாவது தொடர்பான செய்திகளை நாம் சமூகவலைத்தளங்களில் நிறைய கடந்து வந்திருப்போம். வெளிநாடுகளிலும் இதன் மோகம் அதிகமாக இருக்க, சாதாரண கூலி வேலை செய்யும் ஒரு நபர் கூட லாட்டரி டிக்கெட் வாங்கும்போது அவரது வாழ்க்கை தலைகீழாக மாறிவிடும்.
1,200 கோடி ரூபாய்
அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த தம்பதியர் லாட்டரி டிக்கெட்டில் பல மில்லியன் பவுண்டுகளை வெல்ல அந்த பணம் மூலம் வாங்கிய முதல் பொருள் தொடர்பான செய்தி தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட லாட்டரி நிறுவனத்தின் 30 ஆண்டு நிறைவு கொண்டாட்டம் நடைபெற, அதில் அதிக தொகை வென்ற தம்பதியரில் ஒருவரான Frances Connolly மற்றும் அவரது கணவர் Patrick ஆகியோரை நேர்காணல் செய்துள்ளனர்.
இவர்கள் சுமார் 115 மில்லியன் பவுண்டுகளை லாட்டரியில் வென்றுள்ளனர். இது இந்திய மதிப்பில் சுமார் 1,200 கோடி ரூபாய் ஆகும். மேலும் இங்கிலாந்து லாட்டரி வரலாற்றில் இது மிகப்பெரிய ஒரு பரிசு தொகையாக பார்க்கப்படும் நிலையில் இதில் பாதிக்கும் மேற்பட்ட பணத்தை தனது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் பிரான்சஸ் மற்றும் பேட்ரிக் தம்பதி பிரித்து கொடுத்துள்ளனர்.
லாட்டரி வென்ற பணத்தில் முதல் செலவு
மேலும் மீதி பணத்தில் தொண்டு நிறுவனங்களை தொடங்கி கஷ்டப்படும் பல மக்களுக்கு நிறைய உதவிகளையும் தற்போது வரை இந்த தம்பதிகள் தொடர்ந்து செய்து வருவது பலரையும் நெகிழ வைத்துள்ளது. அதே நேரத்தில் இந்த தம்பதியினர் லாட்டரி வென்ற பணத்தில் முதல் முதலாக வாங்கிய பொருளை தற்போது நினைவு கூர்ந்துள்ளது அதிகம் கவனம் பெற்று வருகிறது.
இது தொடர்பாக பேசியிருந்த பேட்ரிக், லாட்டரி வென்ற பணத்தில் முதல் பொருளாக தனது தந்தைக்கு ஒரு தங்க பாக்கெட் வாட்சை வாங்கி கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இன்னொரு பக்கம் அவரது மனைவி பிரான்சஸ், லாட்டரி வென்றது தொடர்பாக நடைபெற இருந்த பத்திரிகையாளர் நிகழ்ச்சிக்காக ஒரு ஹோட்டலுக்கு சென்றதாகவும் ஆனால் மாற்று உடையை அவர் மறந்து விட்டதால், தனது மகளுக்கு அழைத்து உள்ளாடைகளை வாங்கி வரும்படியும் அவர் கூறியுள்ளார்.
பலரும் தாங்கள் வெல்லும் லாட்டரி பணத்தில் ஆடம்பர பொருட்களை முதலில் வாங்க, இந்த பெண்மணியோ சூழ்நிலையால் உள்ளாடைகளை வாங்கியுள்ளது வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.