அமெரிக்காவின் பாதுகாப்பு துறையின் உயர் அதிகாரி Pete Hegseth என்பவர் நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குவது வெளிநாட்டு எதிரிகளை விட, பென்டகனுக்குள் இருக்கும் அதிகாரத்துவம் தான் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
ஒரே இடத்தில் இருந்து கால மண்டலங்கள், கண்டங்கள், கடல்கள் கடந்து தன் கோரிக்கைகளை திணிக்க முயல்கிறது. இது எந்தவித இரக்கமும் இன்றி, சுதந்திரமான சிந்தனையை தடுத்து, புதிய யோசனைகளை நசுக்குகிறது. இது அமெரிக்காவின் பாதுகாப்பை குலைப்பதுடன், சீருடையில் உள்ள இராணுவ வீரர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கிறது.
இந்த விளக்கம் சோவியத் யூனியன் அல்லது சீன கம்யூனிஸ்ட் கட்சியை போத் தோன்றினாலும், அந்த எதிரிகளை பற்றி நான் பேசவில்லை. நான் பேசுவது இதைவிட நுட்பமான, உறுதியான மற்றும் உள்நாட்டிலேயே இருக்கும் எதிரியை பற்றித்தான்.
இது அங்குள்ள உழைக்கும் மக்களோ, சிவிலியன் பணியாளர்களோ அல்லது சீருடையில் உள்ள இராணுவமோ அல்ல. மாறாக, இது அவர்களை சுற்றியுள்ள அதிகார வரம்பற்ற நடைமுறைகள் மற்றும் ஒரே மாதிரியான சிந்தனை திணிப்பு ஆகியவைதான். இங்குப் புதுமைகள் முடக்கப்படுவது கெட்ட நோக்கத்தால் அல்ல, மாறாக நிறுவன மந்தநிலையால் தான்.
இந்த உரை, 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி அப்போதைய பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் ஆற்றிய பேச்சின் அச்சு அசலான நகலாகும். அடுத்த நாளே (செப். 11), அன்று அமெரிக்கா மீது ஒரு பெரிய தாக்குதல் நடந்ததால், உலகம் பரபரப்பானது. அதனால் ரம்ஸ்பெல்டால் இந்த சீர்திருத்தங்களை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. “நாங்கள் விரும்பிய இராணுவத்துடன் போருக்கு செல்லவில்லை, எங்களிடம் இருந்த இராணுவத்துடன்தான் போருக்கு சென்றோம்” என்று அவர் கூறிய வார்த்தைகள் இன்றும் எதிரொலிக்கின்றன.
பென்டகனில் உள்ள தேக்கநிலை, ஒரு விபரீதமான கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது. இங்கு, விளைவுகளை விட நடைமுறைக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த சிக்கலை உடனடியாக களைய வேண்டும்.
“பென்டகன் நிர்வாகம் நடைமுறை சுமையால் செயலிழந்துள்ளது; கற்பனை செய்ய முடியாத அபாய வரம்புகளால் முடங்கியுள்ளது; பென்டகனின் தலைகீழான நடைமுறை கலாச்சாரம், அமெரிக்க தற்காப்பு தொழில் துறையையும் பாதித்துள்ளது. தாமதங்கள், அதிகப்படியான செலவுகள் ஆகியவை தொழில்துறையில் இயல்பானதாகிவிட்டன. இதனால் அவசரம் இன்மையும், புதுமைகளை எதிர்க்கும் அச்சமும், இராணுவ வாடிக்கையாளர்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் இடையே நம்பிக்கையின்மையும் உருவாகியுள்ளது.
இந்தச் சிக்கல்களை சரிசெய்ய, அரசாங்கம் மற்றும் தொழில்துறை இடையே நம்பிக்கையை மீட்டெடுத்து, 5 பரந்த மாற்றங்களை கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:
நீண்ட கால ஒப்பந்தங்கள்
தொழில்துறை சார்ந்த தீர்வுகளுக்கு முன்னுரிமை
திட்டத் தலைவர்களுக்கு அதிகாரம் அளித்தல்.
உற்பத்தியில் அவசரம் மற்றும் நேர்த்தியை புகுத்துதல்.
அதிகப்படியான விதிகள் மற்றும் அறிக்கைகளை நீக்குதல்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
