டிரம்ப் என்னை டேட்டிங் கூப்பிட்டார். நான் அப்போதே டிரம்புடன் டேட்டிங் சென்றிருக்கலாம்.. அமெரிக்க வரலாற்றையே மாற்றியிருப்பேன்.. பிரிட்டிஷ் நடிகை எம்மா தாம்சன் கூறிய ஆச்சரிய தகவல்..!

பிரிட்டிஷ் நடிகை எம்மா தாம்சன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை இரவு உணவுக்காக அழைத்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை, லாக்கரினோ திரைப்பட விழாவில் கலந்துகொண்டபோது நினைவு கூர்ந்தார். டிரம்ப்பின் அந்த அழைப்பை தான்…

emma thomson

பிரிட்டிஷ் நடிகை எம்மா தாம்சன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை இரவு உணவுக்காக அழைத்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை, லாக்கரினோ திரைப்பட விழாவில் கலந்துகொண்டபோது நினைவு கூர்ந்தார். டிரம்ப்பின் அந்த அழைப்பை தான் ஏற்றுக்கொண்டிருந்தால், “அமெரிக்க வரலாற்றின் போக்கையே மாற்றியிருக்கலாம்” என்று அவர் நகைச்சுவையாக கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

இந்த சம்பவம் 1998-ஆம் ஆண்டு, தாம்சன் ‘Primary Colors’ என்ற அரசியல் நகைச்சுவை படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது நடந்தது. அதே நாளில், நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் கென்னத் பிராணாவுடனான எனது விவாகரத்தும் உறுதிசெய்யப்பட்டது.

அந்த நாள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அன்றைய தினம் எனது தொலைபேசி ஒலித்தது, நான் டொனால்ட் டிரம்ப் பேசுகிறேன்’ என்ற குரல் கேட்டது. நான் கூட யாரோ பிராங்க் செய்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் மீண்டும் ‘ஹாய், நான் டொனால்ட் டிரம்ப் பேசுகிறேன் என்று கேட்டபோது, அமைதியாக ‘நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நீங்கள் என்னுடன் இரவு உணவு சாப்பிட வேண்டும்என்று கூறினார்.

டிரம்ப்பின் அழைப்பு வந்தபோதுதான், எனது விவாகரத்து முடிவாகியிருந்தது. அதே நேரத்தில் அவரும் தனக்கு பொருத்தமான துணையை அதாவது விவாகரத்து ஆனவர்களை தேடுகிறார் என புரிந்து கொண்டேன். ஆனால் நான் நாகரீகமாக அவரது கோரிக்கைக்கு மறுத்துவிட்டேன்.

ஒருவேளை நான் டொனால்ட் டிரம்ப்புடன் ஒரு டேட்டிங் சென்றிருக்கலாம். அவ்வாறு நான் சென்றிருந்தால் அமெரிக்க வரலாற்றின் போக்கையே மாற்றியிருக்கலாம்!” என்று அவர் சிரித்து கொண்டே கூறினார்.

எம்மா தாம்சனின் இந்த வெளிப்பாடு, டிரம்ப்பின் தனிப்பட்ட வாழ்க்கையும், அவரது அணுகுமுறையும் உலகத் தலைவர்கள் மத்தியில் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதை உணர்த்துவதாக உள்ளது.