பிரமிடின் உச்சியில் சுற்றித் திரிந்த நாய்.. வைரல் வீடியோவோட காரணம் தெரிஞ்சா மிரண்டு போயிடுவீங்க..

By Ajith V

Published:

சீனப் பெருஞ்சுவர், தாஜ்மஹால் என உலகின் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் ஏழு அதிசயங்கள் என்ற பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. உலக அளவில் ஏழு அதிசயங்களை எடுத்து கொண்டாலும் இன்னொரு பக்கம் பழங்காலம் தொட்டே பலரையும் அதிசயிக்க வைக்கும் வகைகளில் இருந்து வரும் நிறைய வரலாற்று இடங்களும் உள்ளது.

அந்த வகையில் மிக முக்கியமான ஒரு இடம் தான் எகிப்து நாட்டில் அமைந்திருக்கும் பிரமிடுகள். இதற்கு அடியில் மர்மங்களும், அதே நேரத்தில் நம்ப முடியாத வகையிலான விஷயங்களும் இதனைச் சுற்றி வைரலாகிக் கொண்டிருக்கும் அதே வேளையில் அந்த காலத்தில் வாழ்ந்த எகிப்து மன்னர்ள் அல்லது அவர்களின் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் கல்லறையாகவும் இந்த பிரமிடுகள் இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த இடங்களின் புகைப்படத்தை பார்த்தாலே ஒருவித சிலிர்ப்பு உருவாகும். அந்த அளவுக்கு முக்கோண வடிவத்தில் எகிப்து நாட்டில் பல இடங்களில் இந்த பிரமிடுகள் பெரிய உயரத்திற்கு உயர்ந்து நிற்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த காலத்தில் வாழ்ந்தவர்களின் கல்லறைகளாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

மேலும் உலகின் மிக முக்கிமா சுற்றுலாத் தலமாகவும் எகிப்து நாட்டின் பிரமிடுகள் இருந்து வரும் நிலையில், அதன் உச்சியில் நடந்த சம்பவம் தொடர்பா வீடியோ ஒன்று பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. Great Pyramid of Giza எந்த பிரமீடுக்கு மேலே மார்ஷல் மோஷர் (Marshall Mosher) என்ற நபர் ஒருவர் பாரா க்ளைடிங் மூலம் வானத்திலிருந்து இந்த பிரமிடின் அழகை ரசித்தபடி வீடியோ எடுத்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

அந்த சமயத்தில் தான் மார்ஷல் என்ற அந்த நபர், பிரமிடு ச்சியில் கொஞ்சம் கூட எதிர்பாராத ஒரு விஷயத்தையும் கவனித்துள்ளார். தரையில் இருந்து சுமார் 1000 அடி இருக்கும் அந்த பிரமிடு உச்சியில் நாய் ஒன்று சுற்றித் திரிந்ததை தனது வீடியோவிலும் மார்ஷல் பதிவு செய்துள்ளார். அங்கிருக்கும் பறவைகளை அந்த நாய் அங்கும் இங்குமாக ஓடி பிடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் தெரியும் நிலையில் தரையிலிருந்து இத்தனை அடி உயரத்திற்கு அந்த நாய் சென்றதை பலரும் மிக வியப்புடன் தான் பார்த்து வருகின்றனர்.

கொஞ்சம் மிஸ் ஆனால் கூட அந்த நாய் கீழே விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள நிலையில் எப்படி அந்த உயரத்திற்கு அது சென்றிருக்கும் என்பது தான் பலரது மத்தியில் ஒரு விதமான மர்மத்தையே ஏற்படுத்தி உள்ளது என சொல்லலாம். காரணங்கள்துவாக இருந்தாலும் பலரும் அதிசயத்து நிற்கும் பிரமிடு ச்சியில் நாய் ஒன்று நிற்பது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.