அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு இறக்குமதியை வரியை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறார். ஒருபக்கம் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு அதிக வரிகளை விதிப்பேன் என மிரட்டினார். சொன்னபடியே இந்தியாவுக்கு 25 சதவீத வரியை உயர்த்தியதோடு கூடுதல் வழியாக 25 சதவீத வரி விதித்தார்.
அதன்பின் இந்திய பிரதமர் மோடிக்கும் டொனால்ட் டிரம்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை சுமூக முடிவை எட்டியதால் இந்தியாவுக்கான இறக்குமதி வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. மேலும் கூடுதல் வரியான 25 சதவீத வரியையும் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்தார். மேலும், இனிமேல் ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது எனவும் டிரம்ப் கூறினார்..
இந்தியாவுக்கு மட்டுமல்ல.. சீனாவுக்கும் அதிக அளவிலான வரிகளை தொடர்ந்து விதித்து வருகிறார். ஆனல், டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது என அமெரிக்க உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. அமெரிக்க அதிபர் தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று நிறைவேற்றப்பட வேண்டிய வரியை அவர் தன்னிச்சையாக செய்தது தவறு’ என அமெரிக்கா உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது..
இதில் அதிர்ச்சியடைந்த டிரம்ப் இந்தியா, சீனா உள்ளிட்ட 150 நாடுகளுக்கு இறக்குமதி வரி 10 சதவீதம் மட்டுமே என தற்போது அறிவித்திருக்கிறார்.

