ஆம்புலன்ஸ் பின்னே ஏக்கத்துடன் ஓடிய நாய்.. திடீரென நின்ற வண்டி.. பலரையும் கண்கலங்க வெச்ச சம்பவம்..

Published:

மனிதர்களை விட இந்த உலகத்தில் ஒருவருக்கு விஸ்வாசமாகவும் அதிக நெருக்கமாகவும் இருப்பவர்கள் தான் மிருகங்கள். அதிலும் நாம் வளர்க்கும் மிருகங்கள் மீது பாசத்தை காட்டினாலே என்னதான் செய்தாலும் நம்மை விட்டுப் பிரியவே பிரியாது. நாம் காட்டும் அன்பை விட பல மடங்கு அதிகமாக நம் மீது அன்பு செலுத்தும் செல்ல பிராணிகள் இங்கே அதிகம் இருக்கும் சூழலில் அதில் நாய்க்கு என்றுமே தனி இடம் உண்டு.

நாய்கள் மீது நாம் கொஞ்சம் பாசம் காட்டினாலே நமக்கு ஏதாவது பிரச்சனை என்றால் முதல் ஆளாக வந்து நின்று விடும். நமது குடும்பத்திலோ அல்லது நெருங்கிய நண்பர்கள் அல்லது நமக்கு பிரியமானவர்கள் யாராவது கூட அப்படி செய்வார்களா என்று கேட்டால் நிச்சயம் சந்தேகம் தான். ஆனால் அதையெல்லாம் தாண்டி தனது உரிமையாளருக்காக எந்த எல்லைக்கும் செல்வதற்காக நாய்கள் தயாராக இருக்கும்.

இதற்கு சிறந்த உதாரணமாக பல சம்பவங்களை நாம் கூறிக் கொண்டே போகலாம். சமீபத்தில் கூட கேரள மாநிலத்தில் வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட சமயத்தில், பல வீடுகள் காணாமல் மண்ணோடு மண்ணாய் புதைந்து போனது. இதில் நாய் ஒன்று தப்பி இருக்க அது தனது உறவினர் எங்கே இருக்கிறார்கள் என் தேடி அலைந்தது பலரையும் கண்ணீர் வடிக்க வைத்திருந்தது.

செல்லப்பிராணிகளுக்கு பேச மட்டுமே முடியாது என்றாலும் மற்ற அனைத்து குணங்களையும் அவர்களால் மனிதர்களிடம் வெளிப்படுத்த முடியும். நாம் அதிம் அன்பு காட்டாமல் இருந்தால் அதுவும் திருப்பி கோபத்தைத் தான் வெளிப்படுத்தும். அதே வேளையில் நாம் முடிந்த வரைக்கும் அன்பு செலுத்தினால் நமது குடும்பத்தில் ஒருவரை போல நம்மை சுற்றி சுற்றி வரும்.

இந்த நிலையில் சமீபத்தில் தன்னை பாசமாக பார்த்துக் கொண்ட உரிமையாளருக்கு ஒரு பிரச்சனை வர் நாய் ஒன்று செய்த சம்பவம் தற்போது பலரையும் கலங்க வைத்துள்ளது. சமீபத்தில் இது தொடர்பாக வைர்லாகி வரும் வீடியோவின்படி ஆம்புலன்ஸ் ஒன்று சாலையில் வேகமாக சென்று கொண்டிருக்க பின்னால் நாய் ன்று துரத்திக் கொண்டே செல்கிறது.

அந்த நாயின் உரிமையாளரை தான் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்று கொண்டிருந்த நிலையில் இந்த நாயும் சில தூரம் இடைவிடாமல் துரத்திக் கொண்டே சென்றதாக கூறப்படுகிறது. இதனை கவனித்த ஆம்புலன்ஸில் இருந்த நபர், உடனடியாக வண்டியை நடுரோட்டிலேயே நிறுத்தி அந்த நாயையும் உரிமையாளரின் அருகே அமர வைத்து ஏற்றிச் சென்றார்.

அதன் பின்னர்தான் அந்த நாய் சற்று சமாதானம் அடைய இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் பெரிய அளவில் பார்ப்போரை நெகிழ வைத்து வருகிறது. நமக்கு ஒரு பிரச்சனை என்றால் நெருக்கமாக இருப்பவர்களே முதலில் வருவதற்கு தயங்க இந்த நாய் செய்த செயல் பலருக்கும் சிறந்த பாடமாக அமைந்துள்ளது.

மேலும் உங்களுக்காக...