$1000000000000.. இது எவ்வளவு என்பது தெரியுமா? DeepSeekஆல் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம்..!

  இந்த ஆண்டு ஆரம்பத்தில், சீனாவின் புதிய தலைமுறை ஏ.ஐ. மாடலான DeepSeek-ஐ வெளியிட்டது. இது Google, Microsoft, OpenAI, Nvidia போன்ற அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக,…

deepseek

 

இந்த ஆண்டு ஆரம்பத்தில், சீனாவின் புதிய தலைமுறை ஏ.ஐ. மாடலான DeepSeek-ஐ வெளியிட்டது. இது Google, Microsoft, OpenAI, Nvidia போன்ற அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, Nvidia மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது, அதன் பங்குகள் ஒரே நாளில் 600 பில்லியன் டாலர் மதிப்பை இழந்தன.

அமெரிக்க பங்குச்சந்தை தகவலின்படி, கடந்த மூன்று மாதங்களில் Nvidia ஏராளமான இழப்புகளை சந்தித்துள்ளது. அதன் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் டாலர் ($1000000000000) குறைந்துள்ளது, மேலும் அதன் பங்குகள் 27% வீழ்ச்சியடைந்துள்ளன.

Nvidia மட்டுமல்லாமல், Google, Microsoft, OpenAI போன்ற அமெரிக்காவின் முன்னணி ஏ.ஐ. நிறுவனங்களும் DeepSeek வெளியான பிறகு பெரும் நஷ்டங்களை சந்தித்துள்ளன.

மேலும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் புதிய Data Center கட்டுமான பணிகளை தற்காலிகமாக நிறுத்தியது. இதனால் ஏ.ஐ. துறையில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. முதலீட்டாளர்கள் ஏ.ஐ. இன் லாபத்தன்மையை சந்தேகிக்க தொடங்கியுள்ளனர்.

உலகின் முன்னணி ஏ.ஐ. சிப் உற்பத்தியாளராக விளங்கும் Nvidia, DeepSeek வெளிவந்த பிறகு பெரும் மந்தநிலையை சந்திக்கிறது. இதில் முக்கிய விஷயம் என்னவெனில், DeepSeek அமெரிக்க ஏ.ஐ. நிறுவனங்கள் பயன்படுத்தும் மேம்பட்ட Nvidia சிப்புகளுக்குப் பதிலாக பழைய மற்றும் குறைந்த திறன் கொண்ட சிப்புகளை பயன்படுத்தி பயிற்சி பெற்றதாக தெரிகிறது.

சீனா குறைந்த செலவில் ஏ.ஐ. டெக்னாலஜியில் புரட்சி செய்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக நிறுவனங்களுக்குள் உள்ள தகவல்கள் அடிப்படையில், ஏ.ஐ. தொடர்பான ஆர்வம் இப்போது குறைந்து வருகிறது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு CoreWeave என்ற கிளவுட் கம்ப்யூட்டிங் (cloud computing) நிறுவனம் IPO வெளியிட்டபோது முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டாதது. இதனால், அந்த நிறுவனம் தனது பங்கு விலையைக் குறைப்பதோடு, பங்குகளின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மொத்தத்தில் அமெரிக்க ஏ.ஐ. துறையின் மிகப்பெரிய சரிவுக்கு முக்கிய காரணம் சீனாவின் DeepSeek R1 மாடல். இது ஏ.ஐ. மாடல்களை குறைந்த செலவில் பயிற்சி அளிக்க முடியும் என்ற கருத்தை நிலைநாட்டியது. இதனால் அமெரிக்க ஏ.ஐ. நிறுவனங்கள் எதிர்கொள்ளும் முதலீட்டு சவால்கள் அதிகரித்துள்ளன.