இதன் காரணமாக, டீப் சீக் ஊழியர்கள் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டால், அவர்களை கடத்துவதற்கோ, விலைக்கு வாங்குவதற்கோ அல்லது அவர்களிடம் பேரம் பேசுவதற்கோ வாய்ப்பு உள்ளதாக இன்னொரு வதந்தி பரவி வருகிறது.
இதனால், தற்போது டீப் சீக் நிறுவனம் தனது ஊழியர்களின் பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும், நிர்வாகத்தின் அனுமதியின்றி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளக் கூடாது என்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த கட்டுப்பாடு முதற்கட்டமாக உயர்நிலை அதிகாரிகளுக்கு மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், எதிர்வரும் காலங்களில் அனைத்து ஊழியர்களுக்கும் இது அமல்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் ஏஐ தொழில்நுட்பம் வெளிநாடுகளுக்கு கசியக்கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. எனினும், இது ஊழியர்களின் தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாக இந்த நடவடிக்கைக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.