இதன் விளைவாக, அமெரிக்க அரசு, DeepSeek தொழில்நுட்பத்தை அரசு அலுவலகங்களில் மற்றும் ராணுவத்தில் பயன்படுத்தக்கூடாது என்று தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் சீனா சென்ற ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ, “நான் DeepSeek பயன்படுத்தி பார்த்தேன்; அது மிகவும் சிறப்பானது” என்று கூறி, அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளார். மேலும், “ஒரு நல்ல விஷயம் வெளிவரும் போது அதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்; புதிய கண்டுபிடிப்புகள் நல்லதே” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சீனாவில் உள்ள “சைனா கிளீன் எனர்ஜி ஃபண்ட்” என்ற நிறுவனத்தில், ஆப்பிள் நிறுவனம் 99 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், சீனாவின் சமூக ஊடகம் “வைபோ”வில் அவர் முதலீடு செய்திருப்பதாகவும், சீனாவில் மேலும் அதிக முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் DeepSeek நிறுவனத்துடனும் ஆப்பிள் ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டால், அது அமெரிக்க அரசுக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இதெல்லாம் ஒரு செய்தியாக உலா வந்தாலும், உண்மையில் இந்த இரண்டு நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் நடைபெறுமா என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.