சீனாவின் செல்வந்தர்களுக்கு அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான குழந்தைகள்.. வணிகமயமான வாடகைத்தாய் குழந்தைகள்.. சீன செல்வந்தர்கள் ஏன் அமெரிக்காவில் லட்சக்கணக்கில் குழந்தைகள் பெற்று கொள்கிறார்கள்.. தகவல் அறிந்த நீதிமன்றம் அதிர்ச்சி.. இப்படியே போனால் சீனர்கள் மக்கள் தொகை, அமெரிக்காவில் பெரும்பான்மையாகிவிடுமா? அதிர்ச்சி தகவல்..!

அமெரிக்க நீதிமன்றங்களின் அறைகளில் நீதிபதிகள் சமீபகாலமாக ஒரு விசித்திரமான போக்கை கவனிக்க தொடங்கியுள்ளனர். சீனாவின் அதீத செல்வந்தர்கள் அமெரிக்காவின் தளர்வான வாடகை தாய் முறை சட்டங்களை பயன்படுத்தி டஜன் கணக்கிலும், சில நேரங்களில் நூற்றுக்கும்…

chinese

அமெரிக்க நீதிமன்றங்களின் அறைகளில் நீதிபதிகள் சமீபகாலமாக ஒரு விசித்திரமான போக்கை கவனிக்க தொடங்கியுள்ளனர். சீனாவின் அதீத செல்வந்தர்கள் அமெரிக்காவின் தளர்வான வாடகை தாய் முறை சட்டங்களை பயன்படுத்தி டஜன் கணக்கிலும், சில நேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளையும் பெற்றுக்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குடும்பத்தை உருவாக்குவதற்கான ஒரு வழியாக இல்லாமல், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக குழந்தைகளை உற்பத்தி செய்யும் முறையாக மாறி வருவது நீதித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு அசாதாரண வழக்கில், சீனாவின் தொழில்நுட்ப துறை கோடீஸ்வரர் ஒருவர் அமெரிக்க குடும்ப நல நீதிமன்றத்தில் காணொளி வாயிலாக தோன்றி, தனக்கு இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் வேண்டும் என்ற தனது திட்டத்தை வெளிப்படையாக அறிவித்தார். அமெரிக்க வாடகை தாய்கள் மூலம் பிறக்கும் இந்த குழந்தைகள் அனைவரும் ஆண் குழந்தைகளாக இருக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். தனது வணிக சாம்ராஜ்யத்தை எதிர்காலத்தில் வாரிசுகளிடம் ஒப்படைப்பதற்காகவே அவர் இந்த வினோதமான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

அந்தத் தொழிலதிபரால் பெறப்பட்ட சில குழந்தைகள் ஏற்கனவே கலிபோர்னியாவில் செவிலியர்களால் வளர்க்கப்பட்டு வருவதை அறிந்த நீதிபதி கடும் எச்சரிக்கை விடுத்தார். வாடகைத்தாய் முறை என்பது குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குடும்பத்தை உருவாக்குவதற்கு உதவ வேண்டுமே தவிர, வாரிசுகளை கூண்டோடு உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலையாக இருக்கக்கூடாது என்று அவர் வாதிட்டார். ஒரு அரிதான நடவடிக்கையாக, அந்த குழந்தைகளுக்கு பெற்றோராக இருப்பதற்கான உரிமையை நீதிமன்றம் மறுத்ததால், குழந்தைகளின் சட்டப்பூர்வ நிலை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த ஒரு சம்பவம் அமெரிக்கா முழுவதும் உயர் ரக கருத்தரிப்பு தொழில் ஒரு பெரும் வணிகமாக உருவெடுத்துள்ளது. இதற்காக தனியாக IVF கிளினிக்குகள், வாடகைத்தாய் முகமைகள், சட்ட நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து குழந்தைகளை சேகரிக்கும் விநியோக சேவைகள் என ஒரு பெரிய வலைப்பின்னலே செயல்படுகிறது. அமெரிக்காவிற்கு ஒருமுறை கூட நேரில் வராத வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதே இவர்களின் முக்கிய பணியாக உள்ளது.

ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்வதற்கு சுமார் 2,00,000 டாலர்கள் வரை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. சீனாவில் வாடகைத்தாய் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், அதன் குடிமக்கள் வெளிநாடுகளுக்கு சென்று இம்முறையை பயன்படுத்துவதை தடுப்பதில் அந்நாட்டு அரசுக்கு சிக்கல்கள் உள்ளன. அதேபோல், அமெரிக்காவின் பெரும்பாலான மாநிலங்களில் வெளிநாட்டவர்கள் அமெரிக்க வாடகை தாய்களை பயன்படுத்துவதற்கு எவ்வித கடுமையான தடையுமில்லை என்பது இந்த வணிகத்திற்கு சாதகமாக முடிந்துவிட்டது.

நீண்ட காலமாக இந்த வாடகைத்தாய் முறை விவகாரம் யாருடைய கவனத்திற்கும் வராமல் மறைமுகமாக வளர்ந்து வந்துள்ளது. எந்தவித கண்காணிப்பும் இல்லாத இந்த அமைப்பினால், ஒரே வாடிக்கையாளர் வெவ்வேறு மாகாணங்களில் பல வாடகை தாய்களை ரகசியமாக நியமிக்க முடியும் என்றும், இதனை யாராலும் ஒருங்கிணைத்து கண்காணிக்க முடியாது என்றும் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

தற்போது இந்த தொழில்துறையில் சில வழிகாட்டுதல்கள் இருந்தாலும், அவற்றை செயல்படுத்துவது என்பது அந்தந்த நிறுவனங்களின் விருப்பத்தை பொறுத்தே அமைகிறது. ஒரு தனிநபர் தனது வாரிசுகளை பெருக்குவதற்காக பணபலத்தை பயன்படுத்தி குழந்தைகளை உற்பத்தி செய்யும் இந்த விவகாரம், சர்வதேச அளவில் தார்மீக மற்றும் சட்ட ரீதியான கேள்விகளை எழுப்பியுள்ளது. இது போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.