என் அப்பா கோடீஸ்வரரா.. 25 வருஷம் கழிச்சு இளைஞருக்கு தெரிய வந்த உண்மை.. ஆனாலும் துணிச்சலா எடுத்த முடிவு..

25 ஆண்டுகளுக்கு முன் சிறுவனாக இருந்த போது தொலைந்து போன இளைஞருக்கு தனது பெற்றோர் கோடீஸ்வரர் என தெரிய வந்ததன் பின்னர் அவர் எடுத்த சில முடிவுகள் அதிக கவனம் பெற்று வருகிறது. சீன…

China Youth Decision

25 ஆண்டுகளுக்கு முன் சிறுவனாக இருந்த போது தொலைந்து போன இளைஞருக்கு தனது பெற்றோர் கோடீஸ்வரர் என தெரிய வந்ததன் பின்னர் அவர் எடுத்த சில முடிவுகள் அதிக கவனம் பெற்று வருகிறது. சீன நாட்டின் வட பகுதியில் அமைந்துள்ளது ஹெபெய் (Hebei) என்னும் மாகாணம். இங்கே உள்ள ஸிங்டாய் (Xingtai) என்னும் இடத்தை சேர்ந்தவர் தான் Xie Qingshuai.

கடந்த 1999 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 மாத குழந்தையாக இருந்த போது ஷியை சிலர் கடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஷியின் பெற்றோர்கள் அந்த சமயத்தில் பிரபல கட்டுமான நிறுவனத்தை நடத்தி வந்த சூழலில் நீண்ட நாட்களாக மகனை தேடும் பணியில் துரிதமாக ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் இதற்காக இந்திய மதிப்பில் சுமார் 1 கோடி ரூபாய் வரைக்கும் செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

பணக்கார வீட்டு பிள்ளை..

இதற்காக அவர்கள் சோர்ந்து போகாமல் இருந்து வந்த நிலையில் தான் கடந்த ஆண்டு ஷி மீண்டும் தனது நிஜ பெற்றோர்களுடன் இணைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டு கவனிக்கப்பட்டு வந்த ஷி, தான் பெரும் கோடீஸ்வரரின் மகன் என தெரிந்ததும் முதலில் ஆடி தான் போயுள்ளார்.

ஆனால், அதே நேரத்தில் கோடீஸ்வர வாரிசு என தெரிந்தும் அவர் எடுத்த சில முடிவுகள் தான் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஒரே நாளில் ஏழை என்ற நிலையில் இருந்து ஷியின் வாழ்க்கை, பெரும் பணக்கார லெவலுக்கு மாறிப் போக, அனைவரும் இதனை அறிந்து ஏளனம் செய்துள்ளனர். ஒரே ராத்திரியி்ல் இப்படி ஆகிவிட்டது என விமர்சன கருத்துக்களை ஷி மீது பலரும் முன் வைத்தனர்.

நானா சம்பாதிச்சுக்குறேன்..

இதற்கிடையே தான், மகன் கிடைத்த உற்சாகத்தில் தனது பெற்றோர் கொடுத்த விலைமதிப்புள்ள பரிசு அனைத்தையும் வேண்டாம் என மறுத்ததுடன் திடீரென பணக்காரனாக மாறினால் தனது மனநிலையை அது திசை மாற்றி விடும் என்றும் ஷி பயந்துள்ளார். இதனால், தனது காதலியுடன் வாழ ஒரு ஃபிளாட் மட்டும் போதும் என்றும் கூறியுள்ள ஷி, காராக இருந்தாலும் அதனை தானே உழைத்து சம்பாதித்து வாங்கி கொள்கிறேன் என்றும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இன்றெல்லாம் கடினமாக உழைத்து வாழ்வில் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என பலரும் ஓடிக் கொண்டிருக்க, தான் கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்தவன் என தெரிய வந்த பிறகும் இளம் வயதில் வாலிபர் எடுத்த முடிவு, பலரையும் மெய்சிலிர்க்க தான் வைத்துள்ளது.