9 குழந்தை பொறந்துடுச்சு.. இன்னும் நிறைய பேர் வேணும்.. கூடவே இப்டி ஒரு ஒற்றுமையும் இருக்கணும்.. பெண்ணின் வினோத ஆசை..

By Ajith V

Published:

முன்பெல்லாம் தங்களது வருங்கால தலைமுறை தழைத்தோங்க வேண்டும் என்பதற்காக நிறைய குழந்தைகளை பெற்றெடுப்பார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே வருங்கால சந்ததி பற்றி பலரும் நினைப்பதில்லை என்ற சூழலில் தங்களது வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து விட்டு மறைந்தாலே போதும் என்பதுடன் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் போதும் என்றும் நினைக்கிறார்கள்.

ஆனால், அதே நேரத்தில் அரிதாக தொடர்ந்து நிறைய குழந்தைகளை பெற்றுக் கொண்டே இருக்கும் பெற்றோர்களும் இங்கே ஏராளம். சிலருக்கு எல்லாம் 10 முதல் 12 பிள்ளைகள் வரை இருக்கும் நிலையில், இன்னும் குழந்தைகளை பெற்றுக் கொள்வதிலும் பலர் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், அதே நேரத்தில் சீன நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் இதுவரை 9 குழந்தைகளை பெற்றெடுத்து விட்டாலும் இன்னும் நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமென விரும்புகிறார்.

பெண்ணின் வினோத ஆசை

ஆனால், இவை அனைத்தையும் தாண்டி அந்த குழந்தைகளிடம் ஒரு ஒற்றுமை இருக்க வேண்டுமென பெண் நினைக்கும் விஷயம் தான் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. கிழக்கு சீனாவின் செய்ஜாங் மாகாணத்தை சேர்ந்தவர் தான் டியான் டான்சியா (Tian Dongxia). இவரது கணவர் பெயர் ஜாவோவாங்லாங் (Zhao Wanlong).
China woman Bizarre desire on babies

இவர்கள் இருவரும் கடந்த 2008 ஆம் ஆண்டு சந்தித்திருந்த நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திருமணமும் செய்து கொண்டுள்ளனர். தொடர்ந்து, 2010 ஆம் ஆண்டு முதல் குழந்தையை டியான் மற்றும் ஜாவோ ஆகியோர் வரவேற்றுள்ளனர். நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்வது மிகப்பெரிய ஆசீர்வாதம் என்றும் குறிப்பிடும் அவர்கள், கடந்த 14 ஆண்டுகள் திருமண உறவில் மொத்தம் 9 குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளனர். அதில் ஒரு இரட்டை ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளனர்.

12 சீன ராசியில் குழந்தைகள்

இதனிடையே, டியானுக்கு ஒரு வினோத ஆசை இருந்துள்ளது. அதாவது, சீனாவில் உள்ள சாஸ்திர படி மொத்தம் 12 ராசிகள் உள்ளது. இதில், டியான் – ஜவோ தம்பதியருக்கு பிறந்த குழந்தைகளில் இரண்டு பேர் ஒரே ராசியை சேர்ந்தவர்கள். இதனால், மொத்தம் 8 ராசியில் குழந்தைகள் இருக்க, மீதம் இருக்கும் 4 ராசிகளில் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டுமென விரும்பியுள்ளார். தனது கணவரின் ஜீனை வீணாக்க விரும்பவில்லை என்றும் டியான் தெரிவித்துள்ளார்.
China Mother with nine babies

இதற்கு மத்தியில் மொத்தம் 9 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதால் டியானின் உடல்நிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அனைத்து சீன ராசியிலும் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் டியான், தற்போது 10 வது குழந்தைக்காகவும் தயாராகி வருவதாக கூறப்டுடுகிறது. டியானின் கணவர் ஜவோ பெரிய தொழிலதிபராக இருக்கும் நிலையில், குழந்தைகள் நிறைய பிறக்க பிறக்க அதற்கேற்ப தங்களின் வீட்டின் அளவையும் பெரிதாக்கி வருவதாக கூறப்படுகிறது.