என்ன இது நெத்தி மேல கொம்பு.. 107 வயது மூதாட்டி தலையில் இருந்த வினோதம்.. ஊரே சேர்ந்து சொன்ன வியப்பான காரணம்..

By Ajith V

Published:

சீனாவை சேர்ந்த 107 வயது மூதாட்டி ஒருவரின் தலையில் திடீரென ஒரு கொம்பு முளைத்தது தொடர்பான தகவல் தற்போது அதிகம் கவனம் பெற்று வருகிறது. இயல்பாக இந்த உலகில் நிறைய அரிய விஷயங்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான். ஒரு மனிதனின் தலை என எடுத்துக் கொண்டால் நெற்றிக்கு மேலே மூடி என்று தான் இருக்கும்.

அதைத் தாண்டி வேறு ஏதாவது வினோதமாக இருந்தாலும் நிச்சயம் அது பெரிய அளவில் வைரலாக மாறும். அந்த வகையில் தான் சமீபத்தில் சீனாவை சேர்ந்த மூதாட்டி ஒருவரின் தலையில் கொம்பு ஒன்று முளைத்தது தொடர்பான தகவல் பலரையும் அரண்டு போக வைத்துள்ளது. சீன நாட்டை சேர்ந்தவர் தான் 107 வயதாகும் மூதாட்டி சென் (Chen). இவருக்குத்தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நெற்றிக்கு மேலே ஒரு கொம்பு போன்ற வடிவத்தில் நீண்டதாக ஒன்று வளர்ந்து நிற்கின்றது.

குவான்டங் மாகாணத்தை சேர்ந்த இவரது தலையில் கொம்பு முளைத்ததால் அந்த ஏரியாவில் இவர் பிரபலமானவராகவும் தற்போது இருந்து வருகிறார். மேலும் கொம்பு முளைக்க தொடங்கிய சமயத்தில், சென்னை அந்த பகுதியில் பலரும் வியப்புடனும் பார்த்து சென்றதாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் மருத்துவ ரீதியாக இது தொடர்பான நிறைய காரணங்கள் இருந்தாலும் அப்பகுதி மக்கள் 100 வயதை தாண்டியதற்கான பலத்தை தான் இந்த கொம்பு நிரூபிப்பதாகவும் அவர் நீண்ட ஆண்டுகள் வாழ்ந்த ரகசியத்தின் சின்னம் தான் இந்த கொம்பு என்றும் வித்தியாசமான காரணங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் மருத்துவ ரீதியாக இந்த கொம்பு வளர்ந்து வருவதற்கு காரணம் அவர் சூரிய ஒளியுடன் நீண்ட நேரம் தொடர்பு கொண்டதன் காரணமாக உருவான வீக்கம் என்றும் அறியப்படுகிறது. இன்னொரு பக்கம் இந்த கொம்பு ஒருவேளை புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் என்றும் இதனால் அதனை சரிவர கவனிக்க வேண்டும் என்றும் மூதாட்டியை எச்சரித்தும் வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் இந்த கொம்பு முளைத்ததன் காரணமாக அந்த மூதாட்டிக்கு எந்தவித பிரச்சனையோ, உடல்நல அந்த பாதிப்போ ஏற்படவில்லை என்றும் அறியப்படுகிறது. இதனால் அந்த கொம்பையே அவரது ஆரோக்கியமான வாழ்விற்கு சின்னமாகவும் அப்பகுதி மக்கள் குறிப்பிட்டு வருகின்றனர். சுமார் 10 சென்டிமீட்டர் நீளத்திற்கு இந்த கொம்பு 100 வயதை தாண்டிய மூதாட்டியின் தலையில் வளர்ந்த செய்தி தற்போது அனைவரது மத்தியிலும் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டிலும் இந்தியாவைச் சேர்ந்த ஷ்யாம் லால் யாதவ் என்ற நபருக்கு இதேபோல தலையில் நீண்ட கொம்பு வளர்ந்து பின்னர் அகற்றப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.