சீனா தனது CR450 என்ற அதிவேக ரயிலை அறிமுகம் செய்துள்ள நிலையில் இந்த ரயில் ஒரு மணி நேரத்திற்கு 450 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்றும் இதுதான், உலகின் அதிவேக வர்த்தக ரயிலாக எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
CR450 என்ற இந்த ரயில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பீஜிங்கில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சீனாவின் அதிவேக ரயில் வளர்ச்சியில் ஒரு முக்கியமான மைல் கல்லாக கருதப்படுகிறது.
சமீபத்தில் இந்த ரயில் பரிசோதனை செய்ததில் ஒரு மணி நேரத்தில் 450 கிமீ சென்றது உறுதி செய்யப்பட்டது. அதாவது ஒரு மணி நேரத்தில் சென்னையில் இருந்து மதுரை சென்றுவிடலாம்.
இதன் சிறப்பம்சங்கள் என்னவென்றால் இதன் ஏரோடைனமிக் வடிவமைப்பு தான். வளைந்த, இலகுவான வடிவமைப்பு காரணமாக காற்றழுத்தத்தை குறைத்து, அதிக வேகத்தில் எரிசக்தியை சிறப்பாக பயன்படுத்த முடியும்.
இந்த ரயில் இலகுவான, உயர் சக்தி வாய்ந்த பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டதால், செயல்திறன் மற்றும் பாதுகாப்பு அதிகம் என இந்த ரயிலை உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ரயில் CRRC (China Railway Rolling Stock Corporation) என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதும், CRH (China Railway High-speed) என்ற நிறுவனத்தால் இயக்கப்படும் என்றும் சீனா தெரிவித்துள்ளது.
இந்த புதிய தொழில்நுட்ப மேம்பாட்டின் மூலம், சீனா உலகளாவிய ரயில் வளர்ச்சியில் முன்னணி நாடாக தனது நிலை நிறுத்தி கொண்டுள்ளது.