அட.. இப்படியும் ஒரு பூனையா.. 100 பேரின் முடிவை முன்பே கணித்த செல்லபிராணி.. எப்படி சாத்தியமாச்சு தெரியுமா?..

By Ajith V

Published:

என்ன தான் மனிதனுக்கு ஆறறிவு உள்ளது என கூறினாலும், அவர்களை விட ஐந்தறிவு உள்ள மிருகங்களிடம் இருக்கும் குணங்கள் பலரையும் வியப்பில் தான் ஆழ்த்தி வரும். மனிதனுக்கும் மிருகங்களுக்கும் வித்தியாசம் உள்ள ஒரு அறிவின் வெளிப்பாடே பேச முடிவது தான். விலங்குகள் தங்களுக்கு இடையே பேசிக் கொள்வதுடன் நல்ல அன்பினையும் வெளிப்படுத்திக் கொள்ளும்.

மனிதர்களே சில விஷயங்களில் கவனமோ, அன்போ இல்லாமல் இருந்தாலும் அவர்களை விட விலங்குகள காட்டும் அன்பிற்கு ஈடு இணையே கிடையாது. அந்த அளவுக்கு ஐந்தறிவுடன் இருந்தாலும் இணக்கமாக இருப்பதால் பலரின் செல்லப்பிராணிகளாகவும் நாய், பூனை உள்ளிட்டவை வளர்ந்து வருகிறது.

மேலும் விலங்குகள் மற்றும் பறவைகள் ஆகியவற்றில் இருக்கும் சிறப்பம்சமாக அவை இயற்கையுடன் இணைந்தே வாழ்வதால் நிறைய பேரிடர்களை கூட முன்னரே கணிக்கும் குணமும் உள்ளது. உதாரணத்திற்கு சுனாமி வந்த சமயத்தில் நிறைய மாடுகள் உள்ளிட்டவை கடற்கரைக்கு அருகே உள்ள பகுதிகளில் அங்குமிங்குமாக ஓடி இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதே போல, சமீபத்தில் கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டு இன்று ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே சிக்கி இருக்கும் சூழலில் இந்த பேரிடருக்கு முன்பாக கூட சில செல்லப்பிராணிகள் அதற்கான சமிக்ஞையை கொடுத்திருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.

இப்படி சில அபூர்வ குணங்கள் படைத்த விலங்குகளில் பூனை ஒன்றிற்கு இருந்த குணம், தற்போது பலரையும் வியப்படைய வைத்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு பிறந்து 6 மாதங்களே ஆன Oscar என்ற பூனையை US பகுதியில் இருந்த நர்சிங் ஹோம் ஒன்றில் தெரபி பூனையாக வளர்க்கப்பட்டு வந்துள்ளது. அந்த சமயத்தில் அங்கே பணிபுரிந்த சிலர், ஆஸ்கர் பூனையிடம் சில விசித்திர குணங்களை கண்டறிந்துள்ளனர்.

அதாவது அந்த நர்சிங் ஹோமில் இருந்த நோயாளிகள் சிலரின் இறப்பை முன்கூட்டியே கணித்துள்ளது அந்த பூனை. இது அங்கிருந்தவர்கள் மத்தியில் வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக அந்த பூனை தனியாக இருப்பதை தான் விரும்புமாம். ஆனால், அரிதாக சில நோயாளிகள் அருகேயும் அந்த பூனை போய் அமர்ந்துள்ளது.

அப்படி ஆஸ்கர் அமரும் நோயாளிகள் அடுத்த சில மணி நேரங்களில் உயிரிழந்து வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. இதனை அங்கிருந்தவர்கள் முதலில் கவனிக்கவில்லை. ஒரு 20 பேருக்கு வரை இப்படி நடந்த பின்னர் தான் ஆஸ்கர் ஒருவரின் இறப்பை முன்னரே கணிப்பதையும் கவனித்துள்ளனர். இது தொடர்பாக ஆய்வின் படி தெரிய வந்த தகவலில், ஆஸ்கர் என்ற பூனைக்கு இறக்க போகும் உயிரணுக்களில் இருந்து வரும் வேதிப்பொருளை உணர முடிந்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரு முறை இறக்கும் தருவாயில் இருந்த நபரிடம் அந்த பூனை அருகே செல்ல மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில் ஆரோக்கியத்துடன் இருந்த நோயாளியிடம் போய் ஆஸ்கர் அமர, அந்த நபர் தான் முதலில் மறைந்துள்ளார். இந்த முடிவும் அங்கிருந்தவர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

இப்படி பலரையும் மெய்சிலிர்க்க வாய்த்த ஆஸ்கர் என்ற பூனை, கடந்த 2022 ஆம் ஆண்டு மறைந்து போனது. அந்த பூனை இந்த மண்ணில் வாழ்ந்த காலத்தில் ஏறக்குறைய 100 பேரின் மரணத்தை கணித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.