இவ்ளோ பெரிய வீட்டோட விலை 100 ரூபாய்க்கும் கீழயா.. ஏல தொகையை கேட்டதும் அட்ரஸை தேடும் இணையவாசிகள்..

By Ajith V

Published:

இன்று வேகமாக இயங்கி வரும் உலகத்திற்கு மத்தியில் அனைத்து அனைத்தின் விலைகளும் உச்சத்தை தொட்டுக் கொண்டே இருக்கிறது. உதாரணத்திற்கு தங்க நகை விலை நினைத்ததை விட பல மடங்கு ஏறிக் கொண்டே இருக்க அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில் பலரும் நெருங்க முடியாத அளவுக்கு தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல நிலத்திற்கும் அதிக மதிப்புள்ள சூழலில் நாளுக்கு நாள் அவற்றின் விலையும் கூட ஏறிக் கொண்டே போகலாம். என்னதான் பல விஷயங்களில் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கண்டாலும் வீடு மண், பெண் உள்ளிட்ட விஷயங்களுக்கு அதன் மதிப்பு ஏறிக் கொண்டே தான் இருக்கப் போகின்றது.

நமது பெற்றோர்கள் காலத்தில் வாங்கிய வீட்டிற்கும் தற்போது ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்றாலும் அதற்குள்ள செலவுகள் மிக மிக அதிகம். அப்படி ஒரு சூழலில் பிரிட்டனில் உள்ள வீடு ஒன்று ஜீரோ பவுண்டிற்கு ஏலம் விட தொடங்கியுள்ள செய்தி பலரையும் அண்ணாந்து பார்க்க வைத்துள்ளது. அப்படி ஒரு சம்பவம் குறித்த செய்தியை தான் தற்போது பார்க்கப் போகிறோம்.

பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில் ஒரு வீடு விற்பனைக்கு வந்துள்ள நிலையில் அதன் தொடக்க விலை தான் தற்போது பலரையும் வியக்க வைத்துள்ளது. இந்த வீட்டின் அடிப்படை விலை ஜீரோ பவுண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 100 ரூபாய்க்கும் குறைவான அடிப்படை விலை தான் இது.

ஏலத் தொகையாக இது நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், நிச்சயம் பலரும் வாங்க போட்டி போடும் போது விலை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், அடிப்படை விலை நிர்ணயித்தன் பின்னர் சில உண்மை காரணங்களும் உள்ளது.

வேல்ஸ் பகுதியில் ஒரு கிராமத்தில் அழகான இடத்தில் இந்த வீடு அமைந்துள்ள நிலையில், கடைகள் உள்ளிட்ட நிறைய வசதிகளும் சுற்றியுள்ளது. இது தவிர போக்குவரத்து வசதிகளும் இங்கே அருகே அமைந்துள்ளது. அது மட்டுமில்லாமல், பொழுது போக்கு அம்சாங்கள் நிறைந்த இடங்களும் அருகே உள்ளது.

ப்படி பல விஷயங்கள் இருந்த போதிலும் இந்த வீடு தீ விபத்து ஒன்றில் சிக்கியதால் அதன் உட்பகுதி அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ஏலத்தில் குறைந்த விலையில் வீடை வாங்கினாலும் அதை புதுப்பிக்கவே நிறைய பணம் செலவாகும் என தெரிகிறது.

இதன் காரணமாக வீடை குறைந்த தொகைக்கு வாங்கினாலும் அதற்குள் செலவு செய்ய நிறைய முதலீடு செய்ய வேண்டுமென்ற கட்டாயமும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வீட்டிற்கான ஏலம், அக்டோபர் 1 ஆம் தேதி வரை இருக்கும் என தகவல்கள் கூறுவதால் எந்த விலை வரை போகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.