மீண்டும் விர்ஜினாகணும்.. இன்ஸ்டா பிரபலம் எடுத்த வினோத முடிவு.. கூடவே ஒரு ஆபத்தும் இருக்கு..

இந்த புதிய தலைமுறை காலத்தில் அனைத்து விஷயங்களையும் இளைஞர்கள் பலரும் மிக வெளிப்படையாக பேசி வருகின்றனர். ஒரு காலத்தில் நாம் இதை பொது வெளியில் பேசலாமா என பயந்த விஷயங்கள் இன்று மிக சர்வ…

Ravena Hanniely wants to virgin again

இந்த புதிய தலைமுறை காலத்தில் அனைத்து விஷயங்களையும் இளைஞர்கள் பலரும் மிக வெளிப்படையாக பேசி வருகின்றனர். ஒரு காலத்தில் நாம் இதை பொது வெளியில் பேசலாமா என பயந்த விஷயங்கள் இன்று மிக சர்வ சாதாரணமாக சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. பெண் மற்றும் ஆண் ஆகியோருக்கு தனிப்பட்ட முறையில் என்ன தேவை என்பதையும் பலர் வெளிப்படையாக பேசி வரும் நிலையில், பிரேசில் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் எடுத்த முடிவு தொடர்பான தகவலும் அதிக கவனம் பெற்று வருகிறது.

சமூக வலைத்தளங்களில் அதிக பிரபலமானவர் தான் பிரேசில் நாட்டை சேர்ந்த ரவீனா ஹன்னியிலி (Ravena Hanniely). இவர் ஏற்கனவே கன்னித்தன்மையை இழந்துள்ள நிலையில், அதனை மீண்டும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வினோத முடிவு ஒன்றையும் எடுத்துள்ளார். பொதுவாக ஒரு ஆணோ, பெண்ணோ தங்களின் கன்னித்தன்மையை இழந்து விட்டால் அதனை மீண்டும் பெறுவது என்பது சற்று இயலாத காரியம் தான்.

அதனை ஒரு முறை இழந்து விட்டால் மீண்டும் அந்த தன்மையை பெறுவது நிச்சயம் இயலாத காரியம் தான். ஆனால், ரவீணாவோ பல லட்சம் ரூபாய் செலவில் மீண்டும் விர்ஜினிட்டியை பெற வேண்டும் என்றும் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக தனது பிறப்புறுப்பை மீண்டும் புது பொலிவாக மாற்றுவதற்கான சிகிச்சைக்கு சுமார் 19,000 டாலர் என கூறப்படுகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 16 லட்ச ரூபாயாகும். Hymenoplasty என இந்த சிகிச்சை குறிப்பிடப்படும் நிலையில், கொஞ்சம் ஆபத்து அதிகமுள்ள முறை இது என்றும் தகவல்கள் கூறுகின்றது.

மீண்டும் விர்ஜின் ஆகணும்

ரவீனாவோ இதன் மூலம் தனிப்பட்ட வாழ்க்கையை மீண்டும் புதிதாக தொடங்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். “நான் மீண்டும் கன்னித் தன்மையை பெற விரும்புகிறேன். இது எனது சுயமரியாதைக்காகவும், தனிப்பட்ட காரணங்களுக்காகவும் இந்த முடிவு முக்கியமானதாகும்” என்றும் ரவீனா குறிப்பிட்டுள்ளார். எப்போது இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என ரவீனா இன்னும் முடிவு செய்யவில்லை என கூறப்படும் நிலையில், இதற்காக அனைத்து அர்ப்பணிப்பையும் மேற்கொள்ளவும் அவர் தயாராக உள்ளார்.

மேலும் இந்த சிகிச்சையின் போது உடலளவிலும், மனதளவிலும் நிறைய கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறியப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில் Hymenoplasty என்ற சிகிச்சை உண்மையில் கன்னித்தன்மையை மீட்டெடுக்க உதவாது என்றும், உடல்ரீதியாக நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றும் நியூயார்க் பகுதியை சேர்ந்த பிரபல மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

உடல்ரீதியாக வரும் பிரச்சனைகளைத் தாண்டி, இதன் முடிவில் ஒருவித அதிருப்தி உருவாகலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சமுதாயம் ஏதோ பேசுகிறது என்பதற்காக, அதன் நெருக்கடியில் மீண்டும் கன்னித்தன்மையை பெற முயற்சிக்கக் கூடாது என்றும் உங்களது உடல்நதை பேணுவதே சிறப்பு என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.