பல ஆண்டுகள் கழித்து வற்றிய ஏரி.. நீருக்கு அடியில் இருந்த 70 வருட மர்மம்.. உறைந்த மக்கள்

Published:

இந்த உலகத்தில் நமக்கு தெரிந்த விஷயங்கள் ஏராளமானது இருந்தாலும் அவற்றிற்கு அப்பாற்பட்டு பல விஷயங்களை விவரிக்க முடியாத அளவிலான மர்மங்கள் நிறைந்தும் நிச்சயம் இருக்கும். நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு நிச்சயம் ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வரலாறு குறித்த தகவல்கள் மட்டும் தெரிய வரலாம்.

அதற்கும் பின்பான வரலாறுகள் பற்றி தெரிந்திருக்க வேண்டுமென்றால் நிறைய ஆய்வுகளும் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தொல்பொருள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் இது தொடர்பாக நிறைய தகவல்களை ஆராய்ந்து சேகரித்து வரும் சூழலில் அனைத்து மனிதர்களாலும் அது முடியாது என்பது நிதர்சனமான உண்மை.

அப்படி இருக்கையில் அவ்வபோது ஏதாவது ஒரு மர்மமான விஷயங்கள் நடந்தது தொடர்பாக தகவல்கள் வெளியாகி மக்கள் பலரையும் ஒரு நிமிடம் அச்சத்தில் உறைய வைக்கும். ஏறக்குறைய அப்படி ஒரு சம்பவம் தான் கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்து உலக அளவில் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியும் ஏற்படுத்தி இருந்தது.

Bosnia and Herzegovina என்ற நாட்டில் தான் ஜாப்லனிகோ (Jablanicko) என்ற ஏரி ஜப்லானிக்கா என்ற பகுதியில் அமைந்துள்ளது. இதற்கு நேரெட்வா என்ற ஆற்றின் கரையில் அணை ஒன்றும் அமைந்துள்ளது. மேலும் இந்த ஏரியின் மூலம் அப்பகுதியில் சுமார் 2000 மெகா வாட் – மணிநேர மின்சாரம் வரை ஒரு ஆண்டுக்கு உற்பத்தி செய்து வரப்பட்டுள்ளது.

அப்படி நல்ல வளம் பெற்றிருந்த இந்த ஏரிக்கு அருகே கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. அதாவது ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஏரி வறட்சியின் காரணமாக ஒரு துளி நீர் கூட இல்லாமல் வற்றி போனதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட மின்சார அளவில் இருந்து நான்கில் ஒரு பங்கு மின்சாரம் தான் உற்பத்தி ஆகி உள்ளது.

இதனால், மற்ற நகரங்களில் இருந்து பணம் கொடுத்து மின்சாரம் வாங்கும் சூழலும் உருவாகி இருந்தது. இப்படி பல பிரச்னை ஜாப்லனிக்கோ ஏரியை சுற்றி நிகழ்ந்திருந்தாலும் வறட்சியின் காரணமாக மற்றொரு மர்மமான விஷயம் தெரிய வந்தது. அதாவது சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஏரி இருந்த இடத்தில் கல்லறைகள் நிறைய இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதுவரையிலும் அங்கே அப்படி ஒரு மர்மம் இருப்பது தெரியாமல் இருந்த சூழலில், பலரின் கல்லறைகள் இருக்கும் தகவல் தெரிந்ததும் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்து போனதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...