17 வருடத்துக்கு முன்.. செவ்வாய் கிரகத்தில் எடுத்த புகைப்படத்தில் இருந்த கால் தடம்?.. இன்னும் விலகாத மர்மம்..

Published:

இங்கே நிறைய கிரகங்கள் இருந்தாலும் அதில் நாம் பூமி என்ற கிரகத்தில் வாழ்ந்து வருகிறோம். இதைத் தாண்டி செவ்வாய், வியாழன் உள்ளிட்ட பல்வேறு கிரகங்களும் இந்த பூமியை சுற்றி இருக்கும் நிலையில் அங்கே மனிதர்கள் நடமாட்டம் உள்ளதா அல்லது பூமியை போன்று அப்படியே இருக்கும் மற்றொரு கிரகங்களா அல்லது யாரும் நுழைய முடியாமல் இருக்கும் இடங்களா என்பது இன்று வரைக்கும் விஞ்ஞான உலகில் மிகப்பெரிய புதிராக தான் இருந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக பூமிக்கு அப்பாற்பட்ட ஏலியன்கள் என்ற ஒரு உயிரினம் இருப்பதாகவும் பல ஆண்டுகளாக நம்பப்பட்டு வரும் சூழலில், அதிலும் உண்மையான முடிவுகள் எதுவும் இதுவரை எட்டவில்லை. ஏலியன்கள் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் விஞ்ஞானிகள் பலரும் வருங்காலத்தில் பூமியை ஏலியன்கள் ஆக்கிரமித்து விடும் என்றும் மனிதர்களுக்கும், ஏலியன்களுக்கும் சண்டையே உருவாகும் என்றும் பல அதிர்ச்சிகரமான கருத்துக்களையும் அவ்வப்போது வெளியிட்டு சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இதில் எதையும் மக்கள் நம்பத் தயாராக இல்லாத சூழலில் இன்னொரு பக்கம் செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் மனிதர்கள் குடியிருக்கிறார்களா என்பது பற்றியும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி ஒரு சூழலில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பாக நாசா விண்வெளி மையத்தின் மூலம் செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது மீண்டும் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் மிகப்பெரிய அளவிலான ஒரு கால் பாதத்தின் தடம் இருந்துள்ளது. அவை மிகப்பெரிய கால் என்பதால் செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம், விஞ்ஞானிகள் மட்டுமில்லாமல் பொதுமக்கள் பலரையும் குழம்பி போக வைத்திருந்தது. இது பற்றி நிறைய தியரிகளும் அந்த சமயத்தில் பேசப்பட்டு வந்த நிலையில் இந்த புகைப்படம் தற்போது மீண்டும் ஒருமுறை இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

பலரும் இதனை நிறைய முடியை கொண்ட ஏலியனின் கால் தடம் என்றும் அல்லது அசுரத்தனமான மிருகங்கள் போன்றவற்றின் கால் தடங்கலாக இருக்கலாம் என்றும் தெரிவித்தும் வருகின்றனர். ஆனால் இன்னொரு பக்கம் இது ஏலியனாக இருக்காது என்றும் ஏதாவது பாறையின் நிழலாக கூட இருக்கலாம் என்றும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

17 ஆண்டுகளாக நாசா விண்வெளி மையத்தின் மூலம் செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் அதிகம் வைரலாகி வரும் நிலையில் இந்த தியரி மற்றும் இதற்கான காரணம் என்ன என்பதே தெரியாமல் இருப்பது மிகப்பெரிய ஒரு மர்மமாக தான் நீடித்து வருகிறது.

மேலும் உங்களுக்காக...