இதுகுறித்து அவர் கூறியதாவது: “நான் சிறுவயதாக இருந்தபோது, பெர்முடா முக்கோணம் குறித்து பல கதைகளை கேட்டிருக்கிறேன். இதன் காரணமாக, அங்கு சென்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் உருவானது. எனது குழுவினருடன், முழு பாதுகாப்புடன் பெர்முடா முக்கோணத்திற்கு சென்றேன். இதற்கு பிரத்யேகமான ஒரு படகு தயாரிக்கப்பட்டது.
பெர்முடா முக்கோணம் அருகில் வந்த பிறகு, அதில் நான் குதித்தேன். எனது குழுவினர் சுற்றி பாதுகாப்பாக நின்றிருந்தனர். சில முறை ஒவ்வாமை காரணமாக வாந்தி எடுத்தாலும், 24 மணி நேரம் அந்த பகுதியில் நான் கடந்து வந்தேன். சில சிரமங்கள் இருந்தன. ஆனால், மக்கள் நம்பும் அளவுக்கு மர்ம தன்மை எதுவும் இல்லை,”* என்று அவர் கூறியுள்ளார்.
சுமார் 5 லட்சம் சதுர மைல் பரப்பளவு உள்ள பெர்முடா முக்கோணம், 1945ஆம் ஆண்டு முதல் மர்மமான பகுதி என்று கூறப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க கடற்படை விமானம் இந்த இடத்தில்தான் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இன்று வரை அது கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், பெர்முடா முக்கோணத்தில் 24 மணி நேரம் கழித்துவிட்டு, பாதுகாப்புடன் மீண்டும் திரும்பிய யூடியூபரின் இந்த அனுபவம் குறித்து கேட்ட பின்னர் நாம் கேள்விப்பட்டது எல்லாம் வெறும் கட்டுக்கதையா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.