அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, அவர்களது கேள்விகளுக்கு எரிச்சலுடன் பதிலளித்தார். குறிப்பாக, “போருக்கு தயாரா?” என்று கேட்டதற்கு, “அது ஒரு போலிச் செய்தி” என்று கோபமாக பதிலளித்தார். நகரங்களில் குற்றங்களை தடுப்பது போரல்ல, அது பொது அறிவு” என்றும் அவர் தெரிவித்தார்.
சிகாகோ நகரத்தில் வார இறுதியில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர், இது போரல்ல, நகரத்தை சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கை என்று ட்ரம்ப் கூறினார்.
ஒரு செய்தியாளர், “சிகாகோவை விட அதிக குற்றங்கள் நடக்கும் மற்ற நகரங்கள் இருக்கின்றன” என்று கூறியதற்கு, ட்ரம்ப் கோபமடைந்தார். நீ ஒரு இரண்டாம் தர பத்திரிகையாளர் என கோபமாக பதிலளித்தார்.
“கடந்த வார இறுதியில் சிகாகோவில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் தெரியுமா? 8 பேர். அதற்கு முந்தைய வாரம் 7 பேர். 74 பேர் காயம் அடைந்தார்கள். இதைவிட மோசமானதாக ஏதேனும் இருக்கிறதா என்று நான் நினைக்கவில்லை” என்று அவர் பதிலளித்தார்.
வெனிசுலா போன்ற நாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல் மீது தாக்குதல் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு, “நீங்கள் அதை விரைவில் தெரிந்து கொள்வீரகள்’ என்று பதிலளித்தார்.
லெபனான் நாட்டு அரசுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு ஆயுதங்களை ஒப்படைக்க மறுப்பது குறித்த கேள்விக்கு, ட்ரம்ப் பிறகு பதிலளிப்பதாக கூறினார்.
இந்த சந்திப்பின் போது ட்ரம்ப் பல கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல், தனது கருத்துக்களையும் கோபத்தையும் வெளிப்படுத்தினார். இது அவரது வழக்கமான பாணியில் அமைந்திருந்தது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
