isha

அமெரிக்காவுடன் இப்படி ஒரு கேவலமான ஒப்பந்தம் செய்ததா வங்கதேசம்.. இதுக்கு வங்கதேசத்தை அமெரிக்காவுக்கு விற்று இருக்கலாமே.. இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை.. வங்கதேசத்தில் நுழைந்த கிழக்கிந்திய கம்பெனியா அமெரிக்கா? இந்தியாவை எதிர்ப்பதாக கூறி அமெரிக்காவிடம் சரணடைந்த வங்கதேசம்.. பாகிஸ்தான் செய்த அதே தவறை செய்கிறதா?

அமெரிக்காவுடனான சமீபத்திய வர்த்தக ஒப்பந்தம் மூலம் வங்கதேசம் தனது இறையாண்மையையும், பொருளாதார சுதந்திரத்தையும் முழுமையாக அடகு வைத்துள்ளதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் கடும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். வங்கதேசத்தின் முதுகெலும்பாக திகழும் ஆடை மற்றும் ஜவுளித்தொழில்…

trump modi yunus

அமெரிக்காவுடனான சமீபத்திய வர்த்தக ஒப்பந்தம் மூலம் வங்கதேசம் தனது இறையாண்மையையும், பொருளாதார சுதந்திரத்தையும் முழுமையாக அடகு வைத்துள்ளதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் கடும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். வங்கதேசத்தின் முதுகெலும்பாக திகழும் ஆடை மற்றும் ஜவுளித்தொழில் ஏற்கனவே நலிவடைந்துள்ள நிலையில், இந்த புதிய ஒப்பந்தம் அந்த தொழில்துறையை மீள முடியாத ஒரு படுகுழியில் தள்ளியுள்ளது. குறிப்பாக, 15 சதவீத அமெரிக்க ஏற்றுமதிக்காக வங்கதேசம் தனது ஒட்டுமொத்த இறக்குமதி உரிமங்களையும் தரக்கட்டுப்பாடுகளையும் அமெரிக்காவின் கைகளில் ஒப்படைத்துள்ளது. இது ஒரு நாட்டின் வர்த்தக ஒப்பந்தம் என்பதை விட, ஒரு நாடு தன்னைத்தானே ஏலத்திற்கு விட்டுக்கொண்ட நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கியமான மற்றும் ஆபத்தான அம்சம் ஜவுளித்துறை சார்ந்தது. அமெரிக்கா வங்கதேசத்திற்கு 0 சதவீத வரிச்சலுகை அளிப்பதாக கூறினாலும், அதற்கு பின்னால் ஒரு பெரிய நிபந்தனை உள்ளது. அதாவது, அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தி மற்றும் நார்ப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும். அமெரிக்காவிலிருந்து மூலப்பொருட்களை கொண்டு வருவதற்கான போக்குவரத்து செலவு மற்றும் இதர செலவுகளை கணக்கிட்டால், இந்த 0 சதவீத வரிச்சலுகை என்பது வெறும் கண்துடைப்பு மட்டுமே. இதன் மூலம் வங்கதேசத்தின் ஜவுளித்துறை தனித்துவமாக செயல்படும் வாய்ப்பை இழந்து, அமெரிக்காவின் நிழலில் ஒரு அடிமையாக மாறியுள்ளது.

தரக்கட்டுப்பாடு மற்றும் ஆய்வு நடைமுறைகளில் வங்கதேசம் தனது அதிகாரத்தை முழுமையாக துறந்துள்ளது இந்த ஒப்பந்தத்தில் தெளிவாக தெரிகிறது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் சர்வதேச தரத்தில் இருப்பதாக அமெரிக்கா சான்றளித்தால், அதை வங்கதேசம் மறுபரிசீலனை செய்யவோ அல்லது தனது நாட்டின் தரக்கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்படுத்தவோ முடியாது. அதாவது, அமெரிக்காவிலிருந்து எத்தகைய தரம் குறைந்த பொருட்கள் வந்தாலும், வங்கதேச அதிகாரிகள் எவ்வித கேள்வியும் இன்றி அவற்றை அனுமதிக்க வேண்டும். இது ஒரு நாட்டின் அடிப்படை இறையாண்மைக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாகும்.

உணவு மற்றும் மத ரீதியான நம்பிக்கைகளிலும் அமெரிக்காவின் ஆதிக்கம் இந்த ஒப்பந்தம் மூலம் ஊடுருவியுள்ளது. வங்கதேசம் ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தபோதிலும், அமெரிக்காவின் ஹலால் சான்றிதழை எவ்வித நிபந்தனையும் இன்றி ஏற்பதாக ஒப்புக்கொண்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் உணவு பொருட்களின் தூய்மை மற்றும் தரம் குறித்து வங்கதேசத்தினர் சந்தேகம் எழுப்ப முடியாது. பன்றி இறைச்சி சார்ந்த பொருட்கள் அல்லது இதர கலப்பட உணவுகள் வந்தாலும் அவற்றை எதிர்க்கும் வலிமையை வங்கதேசம் இழந்துள்ளது. இது அந்நாட்டின் மத மற்றும் கலாச்சார, மத நம்பிக்கைகளுக்க்கு இழைக்கப்பட்ட துரோகமாகவே கருதப்படுகிறது.

பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடியில் உள்ள வங்கதேசத்திற்கு, இந்த ஒப்பந்தம் மேலும் பல நிதி சுமைகளை ஏற்றியுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் சந்தை விலையை விட 1.5 மடங்கு அதிக விலைக்கு அமெரிக்க கோதுமையை வாங்கவும், அமெரிக்காவிலிருந்து திரவ இயற்கை எரிவாயுவை அதிக விலைக்கு இறக்குமதி செய்யவும் வங்கதேசம் ஒப்புக்கொண்டுள்ளது. இது தவிர, 25 போயிங் விமானங்களை வாங்குவதற்காக பல்லாயிரம் கோடி ரூபாய்களை செலவிட வேண்டிய கட்டாயத்திற்கு அந்நாடு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிதிச்சுமைகள் அனைத்தும் ஏற்கனவே தள்ளாடிக்கொண்டிருக்கும் வங்கதேச பொருளாதாரத்தை முழுமையாக சிதைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

இறுதியாக, தரவு பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் சுதந்திரத்திலும் வங்கதேசம் தனது உரிமையை விட்டுக்கொடுத்துள்ளது. வங்கதேச குடிமக்களின் தரவுகள் எவ்வித தடையுமின்றி அமெரிக்காவிற்கு பகிரப்பட வேண்டும் என்ற விதிமுறை, அந்நாட்டின் தனிநபர் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில், முகமது யூனுஸ் தலைமையிலான அரசு, இந்தியாவின் ஆதிக்கத்தை குறைப்பதாக கூறிக்கொண்டு அமெரிக்காவிடம் சரணடைந்துள்ளது. இது ஒரு புதிய வகை கிழக்கிந்திய கம்பெனி ஆதிக்கத்திற்கு வங்கதேசத்தை இட்டு சென்றுள்ளது. தனது நாட்டை அமெரிக்காவிற்கு விற்றுவிட்டு, வங்கதேசம் ஒரு பொம்மை நாடாக மாறியிருப்பதே தற்போதைய நிதர்சனம்.