அப்பா- அம்மாவை விட போன வாரம் பிறந்த குழந்தையின் வயது அதிகம்.. மருத்துவ உலகில் ஒரு அதிசயம்.. உலகில் இதுவரை காணாத புதுமை..!

மருத்துவ அறிவியல் மற்றும் இனப்பெருக்க மருத்துவத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, தடியஸ் டேனியல் பியர்ஸ் என்ற ஆண் குழந்தை, 30 ஆண்டுகளுக்கும் மேலாக உறைந்திருந்த கருமுட்டையிலிருந்து ஜூலை 26, 2025 அன்று ஓஹியோவில் பிறந்துள்ளார்.…

baby1

மருத்துவ அறிவியல் மற்றும் இனப்பெருக்க மருத்துவத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, தடியஸ் டேனியல் பியர்ஸ் என்ற ஆண் குழந்தை, 30 ஆண்டுகளுக்கும் மேலாக உறைந்திருந்த கருமுட்டையிலிருந்து ஜூலை 26, 2025 அன்று ஓஹியோவில் பிறந்துள்ளார். இதன் மூலம், நீண்ட காலம் பாதுகாக்கப்பட்ட கருமுட்டையில் இருந்து பிறந்த குழந்தை என்ற பெருமை கிடைத்துள்ளது.

குழந்தையின் தாயார் லின்ட்சே பியர்ஸ் தனது குழந்தை குறித்து கூறியபோது, ‘ “அவன் மிகவும் அமைதியானவன். இந்த விலைமதிப்பற்ற குழந்தையை பெற்றதில் நாங்கள் வியப்படைகிறோம்!” என்று அவர் கூறினார். தடியஸின் கதை வெறும் உயிரியல் பற்றியது மட்டுமல்ல; இது நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் ஒரு ஆழமான நெகிழ்வான சம்பவம் என தெரிவித்துள்ளார்.

1994 முதல் 2025 வரை: உறைந்த கருவின் நம்பமுடியாத பயணம்

கடந்த 1994 மே மாதம் லிண்டா ஆர்சர்ட் என்பவர் கருத்தரிக்க பல ஆண்டுகளாக முயற்சிகள் தோல்வியடைந்த பிறகு, அவரும் அவரது கணவரும் IVF ஐ நாடினர். இது 1990களின் முற்பகுதியில் ஒரு புதிய நடைமுறையாகவே இருந்தது. இந்த செயல்பாட்டில் நான்கு கருமுட்டைகள் உருவாயின. ஒன்று ஆர்சர்டின் கருப்பையில் வளர்க்கப்பட்டு ஒரு ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இன்று 30 வயது ஆகிறது. மீதமுள்ள மூன்று கருமுட்டைகளும் திரவ நைட்ரஜனில் உறைந்து பாதுகாக்கப்பட்டு சேமிக்கப்பட்டன.

பல ஆண்டுகளாக அந்த கருமுட்டைகளை விவாகரத்துப் பெற்ற போதிலும் லிண்டா ஆர்சர்ட் பாதுகாப்பாக வைத்து கொள்ள கோரிக்கை விடுத்தார். தனது குடும்பத்தை பெரிதாக்கும் நம்பிக்கையில் அவற்றை பல ஆண்டுகளாக தொடர்ந்து சேமித்து வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு மாதவிடாய் நின்ற பிறகு, இனிமேல் குழந்தைகளை பெற்றெடுக்க முடியாது என்று முடிவு செய்தார். ஆனால், கருமுட்டைகளை நிராகரிக்கவோ அல்லது ஆராய்ச்சிக்கு தானம் செய்யவோ அவர் தயாராக இல்லை. எதிர்கால பெற்றோர் யார் என்று தெரிந்துகொள்ளவும், தனது மகளின் உயிரியல் சகோதரர்களுடன் ஒருவித தொடர்பை பேணவும் அவர் விரும்பினார்.

இந்த நிலையில் லிண்டா ஆர்சர்ட் தான் சேமித்து வைத்திருந்த கருமுட்டைகளை தானம் செய்ய விரும்பினார். அப்போது தான் லண்டனை சேர்ந்த லின்ட்சே மற்றும் டிம் பியர்ஸ் என்ற தம்பதிக்கு தனது கருமுட்டைகளை தானம் செய்ய அவர் முடிவு செய்தார். தத்தெடுக்கும் பெற்றோராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த கருமுட்டையின் மூலம் லின்ட்சே மற்றும் டிம் பியர்ஸ் என்ற தம்பதிக்கு பிறந்த குழந்தை 2025 இல் பிறந்திருந்தாலும், மரபணு ரீதியாக 30 ஆண்டுகள் பழமையானது. அவரது உயிரியல் சகோதரிக்கு 30 வயது ஆவதால் அந்த குழந்தையின் வயது 30 வயதாகவே மருத்துவ ரீதியில் கருதப்பட்டது. அதாவது குழந்தையின் பெற்றோரை விட குழந்தைக்கு வயது அதிகம்.

ஆர்சர்டை பொறுத்தவரை, தடியஸ் ஒரு மருத்துவ அதிசயத்தை விட மேலானது. இன்னும் இரண்டு கருமுட்டைகள் பாதுகாப்பாக இருப்பதால் அந்த கருமுட்டைகள் குழந்தையாக மாற இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று தெரியவில்லை.