பூமியில் வேற்றுகிரக மனிதர்கள்.. 3ஆம் உலகப்போர்.. மனிதர்களை ஆதிக்கம் செலுத்தும் AI.. பாபா வங்காவின் 2026 கணிப்புகள்.. இப்படியெல்லாம் கூட நடக்குமா?

மக்களுக்கு எப்போதும் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்த ஆர்வம் அதிகம். வரலாற்றில், பாபா வங்கா போன்ற சில தனி நபர்கள் தங்கள் துல்லியமான எதிர்கால கணிப்புகளுக்காக பெரும் அங்கீகாரத்தை பெற்றுள்ளனர். பால்கனின் நாஸ்டர்டாமஸ்…

baba vanga

மக்களுக்கு எப்போதும் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்த ஆர்வம் அதிகம். வரலாற்றில், பாபா வங்கா போன்ற சில தனி நபர்கள் தங்கள் துல்லியமான எதிர்கால கணிப்புகளுக்காக பெரும் அங்கீகாரத்தை பெற்றுள்ளனர். பால்கனின் நாஸ்டர்டாமஸ் என அழைக்கப்படும் பாபா வங்கா, பல பெரிய உலக நிகழ்வுகளை முன்னறிவித்துள்ளார். 2025-ஆம் ஆண்டை பற்றி அவர் கூறப்பட்ட கணிப்புகள், பெரும் அழிவுகள் மற்றும் உயிரிழப்புகளை சுட்டிக்காட்டுகின்றன. தற்போது, 2026-ஆம் ஆண்டுக்கான அவரது கணிப்புகள் வெளியாகி, பலரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன.

பாபா வங்காவின் 2026-ஆம் ஆண்டு கணிப்புகள்.. உலகளாவிய பேரழிவு:

2026-ஆம் ஆண்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள், மற்றும் மோசமான வானிலை காரணமாக மக்கள் மற்றும் புவிக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று பாபா வங்கா கணித்துள்ளார். இந்த நிகழ்வுகளால், பூமியின் நிலப்பரப்பில் சுமார் 7 முதல் 8% பாதிக்கப்படலாம் என்று அவர் கூறியுள்ளார். இந்த நிகழ்வுகள் எவ்வாறு தொடங்கும் என்று அவர் தெளிவாக கூறாவிட்டாலும், அதற்கான ஆரம்ப அறிகுறிகள் இப்போதே தென்படுவதாக பலர் நம்புகின்றனர்.

மூன்றாம் உலகப் போர்:

2026-ஆம் ஆண்டில் ஒரு பெரிய உலகப்போர் வெடிக்கும் என்று பாபா வங்கா கணித்துள்ளார். 2025-இல், இந்தியா-பாகிஸ்தான், ஈரான்-இஸ்ரேல், தாய்லாந்து-கம்போடியா போன்ற பல நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. அவரது கணிப்புப்படி, 2026-இல் நிலைமை மேலும் மோசமடையலாம். சீனா தைவானை தாக்கக்கூடும் என்றும், ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே நேரடி மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம்:

2026-ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு (AI) ஆதிக்கம் செலுத்தும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார். 2025-இல், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு வேகமடைந்துள்ளது. இது பல மனித வேலைகளை மாற்றி வருகிறது. 2026-இல் அதன் வளர்ச்சி உச்சத்தை எட்டி, அனைத்தையும் மாற்றக்கூடும்.

விண்வெளிவாசிகள் வருகை:

பாபா வங்காவின் மிகவும் பரபரப்பான கணிப்பு இது. 2026-ஆம் ஆண்டு நவம்பரில், ஒரு பெரிய விண்வெளிக்கப்பல் பூமியை நோக்கி வருவதாக அவர் கணித்துள்ளார். இதன் மூலம், மனிதர்கள் முதன்முறையாக விண்வெளிவாசிகளுடன் தொடர்பு கொள்ள வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. ஹார்வர்ட் வானியற்பியலாளர் அவி லோப், ‘3ஐ/அட்லஸ்’ (3I/ATLAS) என்ற ஒரு விண்வெளி பொருள் பூமிக்கு அருகில் வருவதாக குறிப்பிட்டுள்ளார். இது ஒரு இயற்கையான வால் நட்சத்திரமாக இருக்கலாம் என்று பலர் கூறினாலும், இது விண்வெளிவாசிகளின் தொழில்நுட்பமாக இருக்கலாம் என்றும், சில சமயங்களில் அது ‘ஆபத்தானதாக’ இருக்கலாம் என்றும் லோப் கருதுகிறார்.

பாபா வங்காவின் பல கணிப்புகள் ஏற்கனவே உண்மையாகியுள்ள நிலையில், அவரது இந்த புதிய கணிப்புகள் பலருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.