விவாகரத்து ஆன பின் ரூ.55000 கோடி சம்பாதித்த பெண்.. புதிய கணவருடன் மகிழ்ச்சியான வாழ்க்கை..!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் விவாகரத்துக்குப் பிறகு புதிய லைஃப் பார்ட்னரை தேர்ந்தெடுத்து, தொழிலிலும் அவருடன் கூட்டாளியாக இணைந்து கடுமையாக உழைத்து, தற்போது ரூ.55,000 கோடி மதிப்புடைய அதிபதியாக உயர்ந்துள்ளார். இது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.லிண்டா…

linda
அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் விவாகரத்துக்குப் பிறகு புதிய லைஃப் பார்ட்னரை தேர்ந்தெடுத்து, தொழிலிலும் அவருடன் கூட்டாளியாக இணைந்து கடுமையாக உழைத்து, தற்போது ரூ.55,000 கோடி மதிப்புடைய அதிபதியாக உயர்ந்துள்ளார். இது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.லிண்டா ரெஸ்னிக் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த இந்தப் பெண், சிறு வயதில் படிப்பில் ஆர்வமில்லாமல் இருந்தார். அவரது தந்தை சினிமாவில் பெரிய மனிதராக இருந்தாலும், அவருக்கு சினிமாவிலும் விருப்பம் இல்லை. இந்த நிலையில், 19 வயதில் அவர் ஒரு அட்வர்டைசிங் ஏஜென்சி தொடங்கினார். அந்த நிறுவனம் நல்ல வளர்ச்சியை அடைந்ததையடுத்து, இதுவே தனது வாழ்க்கைப் பாதை என்று அவர் முடிவு செய்தார்.

அப்போது, அவர் ஒரு புத்தக பதிப்பாளரை திருமணம் செய்துகொண்டார். திருமண வாழ்க்கையில் அவருக்கு இரண்டு மகன்கள் பிறந்தபோதும், கணவருடன் சரியான புரிதல் இல்லை. தொழிலில் மேலும் வளர வேண்டும் என்றால், திருமண பந்தத்தை முற்றிலும் முறிக்க வேண்டும் என்று முடிவு செய்து, விவாகரத்து பெற்றார்.

விவாகரத்துக்குப் பிறகு, ஸ்டூவர்ட்  என்பவரை சந்தித்தார். அவரும் விவாகரத்து பெற்றவராக இருந்தார். முதலில் தொழிலில் கூட்டாளிகளாக இணைந்த அவர்கள், ஒரு கட்டத்தில், வாழ்க்கை பார்ட்னராக இணைந்தால் சிறப்பாக இருக்கும் என நினைத்து திருமணம் செய்துகொண்டனர்.

அந்த நேரத்தில், ஸ்டூவர்ட் மாதுளை, திராட்சை, எலுமிச்சை மற்றும் அவற்றைச் சார்ந்த பழச்சாறுகளை தயாரித்து, அமெரிக்கா முழுவதும் விற்பனை செய்யும் தொழிலை தொடங்கினார். அந்த வியாபாரத்திற்கான விளம்பர முயற்சிகளை லிண்டா மேற்கொண்டார். இருவரும் இணைந்து சில நிறுவனங்களையும் வாங்கினர். அதன் பிறகு, அவர்களின் வளர்ச்சி ஜெட் வேகத்தில் முன்னேறியது.

இப்போது, அவர்களது நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ.1,10,000 கோடி. அதில் சம பங்கு வைத்திருப்பதால், லிண்டாவின் சொத்து மட்டும் ரூ.55,000 கோடி. தனது பணத்தை அவர் தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாமல், ஏராளமான சமூக நலத்திட்டங்களுக்கு நன்கொடையாக வழங்கி வருகிறார்.

விவாகரத்துக்குப் பிறகு வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைக்காமல், தன்னம்பிக்கையுடன் முன்னேறி, வித்தியாசமாக சிந்தித்து வெற்றி கண்ட லிண்டா, இன்று குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்.