ஒரே ஒரு லைக்கால் பறிபோன வேலை.. LinkedIn-ஆல் வந்த வினை.. Reddit தளத்தில் குமுறிய பெண்..

By John A

Published:

தற்போது சமூக ஊடகங்களின் அதிகமான தாக்கத்தால் கருத்துச் சுதந்திரம் என்பது சோஷியல் மீடியாக்களில் அதிகமாக வலம் வருகிறது. எந்த வீடியோ போட்டாலும் அதில் உள்ள நிறை, குறைகள் ஆகியவற்றை விமர்சித்து எழுதுவது வாடிக்கையாகி விட்டது. அதேபோல் வீடியோக்களுக்கு கீழே கமெண்ட்டுகள் தெரிவிப்பதும் அதிகரித்து வருகிறது. இப்படி கமெண்ட்கள் பதிவிடுபவர்களில் பலர் தங்களது உண்மையான ஐடி மூலம் வருவதில்லை.

சமூக ஊடகங்களில் பதிவிடும் வீடியோக்கள் பிடித்திருக்கிறது எனில் லைக் போடுவதும் வாடிக்கையான செயலே. ஆனால் இப்படி ஒரு பெண் போட்ட ஒரு லைக்-ஆல் இன்று அந்தப் பெண்ணின் வேலையே பறிபோய் இருக்கிறது. பிரபல வேலை வாய்ப்புத் தளமான லிங்க்ட் இன் மூலம் உலகில் உள்ள எந்தநிறுவனத்திற்கும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது அதில் பணிபுரிபவர்களுடன் சாட் செய்யலாம்.. உரையாடலாம்.. பணித் தன்மை குறித்துக் கேட்கலாம் என்பது போன்ற சகல வசதிகளால் லிங்க்ட் இன் இணையதளம் பெரும்பாலும் வேலை தேடும் இளைஞர்களால் விரும்பப்படுகிறது.

AI மூலம் உருவாக்கப்பட்ட பாப் இசைக்கலைஞர்.. இன்னும் என்னவெல்லாம் வருமோ?

இதில் பணிச்சூழல் குறித்த வீடியோக்களும் பதிவேற்றப்படுகின்றன. இந்நிலையில் மோசமான பணிச் சூழலில் ஏற்படும் மன அழுத்தம் குறித்த வீடியோ ஒன்று லிங்க்ட் இன் தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த ஒரு பெண் மன நலம்குறித்த நிறுவனத்தில் பணிபுரியும் எனக்கும் இதுபோன்று நேர்வதாகக் கூறி அந்த வீடியோவிற்கு லைக் போட்டிருந்தார்.

இதனைக் கவனித்த அந்த நிர்வாகம் அப்பெண்ணை பணியிலிருந்து நீக்கம் செய்திருக்கிறது. இதனால் மேலும் மனஉளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் தனது மனக்குமுறலைப் புகாரா ரெட்டிட் இணையதளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

ஒரு லைக் போட்டது குத்தமாடா என்பது போல் வீடியோ பார்த்து அதற்கு லைக் போட்டதால் இன்று வேலை பறிபோய் இருக்கிறது.