சீனாவில் சிகிச்சைக்காக ஒரே நாளில் பிடுங்கப்பட்ட 23 பற்கள்.. அடுத்த 13 நாட்களில் ஏற்பட்ட சோகம்..

By John A

Published:

தற்போது எங்கு பார்த்தாலும் புற்றீசல் போல் மருத்துவமனைகள் பெருகி விட்டன. இதற்குக் காரணம் மனிதனின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. உடலுழைப்பு என்பது பெருமளவில் குறைந்து ஆன்லைனிலும், சமூக வலைதளங்களிலும் தங்களது நேரத்தை வீணடித்து உடல் நலனைப் பேணுவதில்லை.

இதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. மருத்துவமனைகளைப் பொறுத்தவரை தற்போது பல் மருத்துவமனைகள் பல்கிப் பெருகிவிட்டது. பல் அழகுக்காகவும், பல் உபாதைகளுக்காகவும் சிகிச்சை பெறுவதும் அதிகரித்து வருகிறது.

இரண்டே வருசத்துல 114 கிலோ குறைச்சாச்சு.. ரசிகர்களை ஏமாற்றி பிரபல யூடியூபர் செஞ்ச வேலை..

இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த ஹுவாங் என்பவர் தனது பல் உபாதைகளுக்காக ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள பல் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அப்போது அவரைச் சோதித்த மருத்துவர் யுவான் பற்களை எடுத்து விட்டு புதிய பற்கள் பொருத்துவதே சிறந்த வழி என்று கூற அவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார். அதன்படி சிகிச்சை தொடங்கப்பட்டது. அவர் வாயிலிருந்து மொத்தம் 23 பற்கள் பிடுங்கப்பட்டு அதன்பின் 12 பற்கள் பொருத்தப்பட்டிருக்கிறது.

நல்ல நிலையில் வீடு சென்றவருக்கு அடுத்த சில நாட்களில் தொந்தரவு தர ஆரம்பித்திருக்கிறது. ஒருகட்டத்தில் அவர் உடல்நிலை மோசமாகி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பல் பிடுங்கிய 13 நாட்களிலேயே உயிரிழந்திருக்கிறார். இத்தனைக்கும் அந்த மருத்துவர் 5 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.

இதனால் அவரது குடும்பம் சோகத்தில் மூழ்கியது. அவரது மகன் தன் தந்தை இவ்வளவு சீக்கிரம் இறந்து விடுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவருக்காக நாங்கள் வாங்கிக் கொடுத்த புதிய காரைக் கூட அவர் ஓட்டவில்லை. அவருக்குப் பல் சிகிச்சைக்காக 1 பல்லுக்கு ரூ. 17,000 வரை செலவு செய்தும் பலனளிக்காமல் போய்விட்டது.

இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.