ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பொழுதுபோக்கு இருக்கும். விளையாடுவது, படிப்பது, பைக் ரைடிங் செல்வது, வரைவது, பாடல்கள் கேட்பது, அபூர்வ பொருட்களைச் சேகரிப்பது என ஓய்வு நேரங்களில் பயனுள்ளதாக தங்களது பழக்கங்களை மாற்றுகின்றனர். சில நேரம் விசித்திரமான பொழுதுபோக்குகளைக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். அப்படி ஒருவர்தான் இவர்.
ஜெ. பேபி படத்தில் ஊர்வசி அடுத்தவர் வீட்டினைப் பூட்டி சாவியை தான் எடுத்துக் கொண்டு போகும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதுஒரு வகை மன அழுத்தத்தின் வெளிப்பாடே. இதேபோல்தான் ஜப்பானிலும் ஒருவர் வித்தியாசமான பழக்கத்தில் ஈடுபட்டு தற்போது சிறையில் இருக்கிறார்.
ஜப்பானைச் சேர்ந்த 37 வயதான அந்த நபருக்கு அடுத்தவர் வீட்டுக் கதவுகளை உடைப்பது தான் விநோத பழக்கமாம். திருட்டு சம்பவங்களில் ஈடுபடாமல் அடுத்தவர் வீட்டு கதவுகளை உடைத்து விட்டுச் செல்வது தான் இவரின் பொழுதுபோக்கு. இப்படி இதுவரை சுமார் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளின் கதவுகளைப் பதம் பார்த்துள்ளார்.
களைகட்டிய குரங்கு திருவிழா.. அறுசுவை விருந்தில் உண்டு மகிழ்ந்த குரங்குகள்..
இவ்வாறு செய்வதால் தனக்கு மன அழுத்தம் குறைகிறது என்று தெரிவித்துள்ள அவர், யாராவது பார்த்து விடுவார்களோ என்று நோட்டமிட்டுக் கொண்டே கதவினை உடைக்கும் பொழுது கைகள் வியர்ப்பது தனக்கு கிக் ஏற்றுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த செய்கையால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க தற்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது ஒருவித மன அழுத்த நோயே. இது போன்ற மனநிலையில் உள்ளவர்களைக் கண்காணித்து தகுந்த சிகிச்சை கொடுக்கும் பொழுது நாளடைவில் இந்தப் பழக்கம் மாறிவிடுகிறது. இல்லாவிடில் இது தீவிரமடைந்து விபரீத விளைவுகளையும் ஏற்படுத்தும்.