இது சந்தேகமோ இல்ல…லவ்-ஆ..? கணவனின் வித்தியாசமான டார்ச்சரில் சிக்கிய மனைவி.. எடுத்த அதிரடி முடிவு..

By John A

Published:

தற்போது குடும்ப நல நீதிமன்றங்களிலும், அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் பெண்களைக் கொடுமைப் படுத்துவதாகவும், வரதட்சணைக் கொடுமை, புகுந்த வீட்டில் கொடுமை போன்ற பல்வேறு காரணங்களுக்குகாக தினந்தோறும் வழக்குகள் பதிவாகி வருகின்றன. மேலும் கணவன்-மனைவி கருத்து வேறுபாட்டால் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்தும் காத்திருக்கின்றனர்.

என்னதான் கணவன் மனைவியாக இருந்தாலும் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவது அவர்களின் உரிமைகளை பாதிக்கிறது. இதனால் அவர்களுக்குள் விரிசல் ஏற்படுகிறது. அதற்கு அதீத அன்பும், அக்கறையும் ஒரு காரணமாகவும், சந்தேகேம், சைக்கோதனமான மனநிலை போன்றவையும் காரணங்களாக இருக்கலாம். இப்படி ஒருவருக்கொருவர் மாறிமாறி குற்றம் சுமத்தியும், அதீத அன்பால் சில விபரீத முடிவுகளையும் எடுக்கின்றனர்.

ஜப்பான் நாட்டிலும் ஒரு கணவன் தனது மனைவிமேல் கொண்ட அதீத அன்பால் வித்யாசமாக மனைவியை டார்ச்சர் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. ஜப்பான் நாட்டிலுள் ஒரு தம்பதி தனது கணவனின் லவ் டார்ச்சர் பொறுக்க முடியாமல் அவர் மேல் புகார் கூறி கைது செய்ய வைத்திருக்கிறார். தனது மனைவி மேல் கொண்ட அதீத அன்பால் அவர் பணிக்குச் சென்றதும் தினமும் 100 முறைக்கு மேல் அவருக்கு விடாமல் போன் செய்திருக்கிறார்.

வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகள்.. ஒரு உடலை அடக்கம் செய்ய செலவு கணக்கு எவ்வளவு தெரியுமா?

அதுவும் வேறு வேறு எண்களிலிருந்து. போன் செய்து ஆசையாக பேசினால்கூட பரவாயில்லை. எதிர்முனையில் மனைவி ஹலோ ஹலோ என்று கத்திக் கொண்டே இருந்து ஒருகட்டத்தில் அவர் வெறுத்து இணைப்பைத் துண்டிக்கும் வரை அமைதியாகவே இருப்பாராம் கணவர். இப்படியே சில நாட்கள் சென்றிருக்கிறது.

கணவரும் தினசரி மனைவிக்குப் போன் செய்து அமைதியாக இருப்பது வாடிக்கையாகி விட்டது. இதனால் அப்பெண் மிகுந்த மன உளைச்சலில் இருந்திருக்கிறார். ஒருநாள் கணவன் விடுமுறையில் வீட்டில் இருக்க அன்றைய தினம் எந்த அழைப்புகளும் வரவில்லை. எனவே மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் தனது கணவர் தான் இதுபோன்று செய்துள்ளததை உறுதிப்படுத்திய அவர் போலீசில் புகார் அளிக்க இன்று கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் கணவர்.

மனைவி மேல் கொண்ட அதீத அன்பும் இன்று அவருக்கே மனைவி மூலம் ஆப்பு வைத்துவிட்டது.