சீனாவுல மட்டும்தான் இந்தமாதிரியெல்லாம் நடக்குது.. பூனையை வேலைக்கு எடுத்த உணவகம்.. என்ன வேலைன்னு தெரிஞ்சா ஆடிப் போயிடுவீங்க..!

By John A

Published:

சீனா : மனிதர்கள் வேலையை எந்திரங்கள் எளிதாக்கின. இதனால் மனிதர்கள் வேலை செய்யும் பணிச்சுமை குறைந்தது. இதற்கு அடுத்ததாக ரோபோக்கள் வர ஆரம்பித்த போது பெருமளவில் மனிதர்களின் வேலை வாய்ப்பு குறைந்தது. இது போதாதென்று தற்போது AI தொழில்நுட்பமும் வேலைகளை பாதிக்குப் பாதியாகக் குறைத்து விட்டது. இனி போகிற போக்கில் மனிதர்களுக்கு வேலையே இருக்காது போல.

தற்போது உயிருள்ளவற்றில் மனிதர்களும், இதர சில விலங்குகளும் மனிதர்களுக்குப் பேருதவியாக வேலை செய்து வருகின்றன. மனிதர்கள் செய்யும் வேலைகளைப் போலவே நாய்கள் காவல் துறையில் பணிபுரிவது, கழுதைகள், யானைகள், ஒட்டகங்கள் சுமை தூக்கப்பயன்படுவது என பல்வேறு வகைகளில் உதவி செய்து செய்து வருகின்றன.

பாம்பு கடிச்சிருச்சா…? இத மட்டும் செய்யாதீங்க.. உடனே உயிர் போகும் ஆபத்து..

தற்போது இன்னொரு விலங்கு ஒன்று வேலைக்கு ரெடியாகி விட்டது. அவர்தான் பூனையார். பொதுவாக பூனைகள் வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படுவது வழக்கம். இங்கு ஓர் பூனை ஓர் உணவகத்தில் பணி செய்யப் போகிறது. என்ன வேலை தெரியுமா வரும் வாடிக்கையாளர்களுக்கு வேடிக்கை காட்டுவது தான் இதன் வேலை. தங்கள் நிறுவனத்திற்குப் பூனை வேலை செய்ய வேண்டும் என சீனாவைச் சேர்ந்த கஃபே உரிமையாளர் ஒருவர் வித்தியாசமாக விளம்பரம் செய்துள்ளார்.

தங்கள் நிறுவனத்திற்கு பகுதி நேரமாக வேலை செய்ய பூனை தேவைப்படுவதாகவும், அதற்கு தினமும் உணவு மற்றும் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என்றும், மேலும் அதன் உரிமையாளர் கஃபே-க்கு வந்து உணவருந்தும் போது 30% கட்டணச்சலுகை வழங்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறார் அந்த கஃபே உரிமையாளர். பணிக்குச் சேரப்போகும் பூனையின் வேலை என்ன தெரியுமா? கஃபேயைச் சுற்றி வந்து வாடிக்கையாளர்களுடன் விளையாடுவதே அதன் வேலை. புதுசு புதுசா யோசிப்பாங்களோ..!