$5 மில்லியன் எல்லாம் ஒரு தொகையா? தினமும் 1,000 கோல்ட் கார்டு விற்கும் அமெரிக்கா..!

  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிமுகப்படுத்திய $5 மில்லியன் கோல்ட் கார்டு விசாக்கள் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. ஒரே நாளில் 1,000 கோல்ட் கார்டு விற்றுவிட்டதாக வணிகத் துறை செயலாளர் ஹோவர்டு…

gold card

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிமுகப்படுத்திய $5 மில்லியன் கோல்ட் கார்டு விசாக்கள் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. ஒரே நாளில் 1,000 கோல்ட் கார்டு விற்றுவிட்டதாக வணிகத் துறை செயலாளர் ஹோவர்டு லுட்நிக் என்பவர் தெரிவித்தார். இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை வெளியேற்றுவது என்பது அமெரிக்காவின் முக்கிய வேலையாக ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் அமெரிக்கா கோல்ட் கார்டு விற்பனை செய்து அமெரிக்காவுக்கு வர விரும்புபவர்களுக்கு ஒரு வாய்ப்பையும் கொடுத்தது.

“உலகம் முழுவதும் 37 மில்லியன் பேர் இந்த Gold Card வாங்கும் நிலையில் உள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த கார்டுகளை தினமும் 1000 பேர் வாங்கி வருவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. $5 மில்லியன் என்பது மிக அதிகம், இந்த கோல்ட் கார்டு விற்பனை நிச்சயம் வெற்றி பெறாது என்று கூறப்பட்ட நிலையில் $5 மில்லியன் எல்லாம் ஒரு தொகையா? அமெரிக்கா சென்றால் போதும் என பலர் போட்டி போட்டு வாங்குகின்றனர்.

கோல்ட் கார்டு  வாங்குபவர்கள் அமெரிக்காவின்  நிரந்தர குடியுரிமை பெற முடியும் என்பதால் பலர் குடும்பத்துடன் கோல்ட் கார்டுகளை வாங்கி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்கக் குடியுரிமைக்கான புதிய பாதையாக இந்த கோல்ட் கார்டை  அறிவித்தார்.  இந்த மதிப்பில் சுமார் ரூ.43 கோடி விலையில்   வழங்கப்படும் இந்த விசா வாங்குவதன் மூலம் Green Card வசதிகளுடன், அமெரிக்கக் குடியுரிமைக்கும் வழிவகுக்கும். மேலும் இது Green Card போலவே செயல்படுவதால்  உலகின் முன்னணி பணக்காரர்கள் அமெரிக்காவில் குடியேற அனுமதிக்கும் வகையில் உள்ளது.

உலகளவில் பணக்காரர்களை அமெரிக்காவுக்கு வரவழைக்க டிரம்ப் இந்த புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இதன் மூலம், வியாபாரம் செய்யும் பெரும் முதலீட்டாளர்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த நபர்களை அமெரிக்காவில் குடியேற செய்ய அவர் முயன்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.