கனடாவிற்கு ஏற்றுமதியான 200 கொள்கலன் அமெரிக்க பாலாடைக்கட்டி என்ற cheese கனடா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதில் தொடங்கி, விஸ்கான்சின் மாநிலத்தின் பண்ணைகளில் பால் ஆறாக கொட்டப்படுவதுடன் முடிந்தது.
கனடா விதித்த 300% வரி, ஒரு பெரிய அடியாக அமெரிக்க பால் பண்ணை தொழிலுக்கு விழுந்தது. இதனால், பல பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க பால் பொருட்கள் பயனற்ற பொருளாக மாறின. பெரும் நஷ்டம் காரணமாக விவசாயிகள் பீதியில் உள்ளனர். வால்மார்ட் கடைகளில் காலியான பால் பொருட்கள் மற்றும் சீஸ் பாக்கெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், வெள்ளை மாளிகையின் தரப்பிலிருந்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. அமெரிக்காவின் 3 பில்லியன் டாலர் பால் பொருட்கள் ஏற்றுமதி நிராகரிக்கப்பட்டதால், டிரம்ப் மிகுந்த கோபத்தில் இருப்பதாகவும், கனடா பிரதமர் மார்க் கார்னியின் இந்த நடவடிக்கை அமெரிக்க விவசாயிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தைகள் மற்றும் விவசாயிகளின் பாதிப்பு
இது வெறும் பால் மற்றும் பால் பொருட்களை பற்றிய ஒரு விவகாரம் மட்டுமல்ல; இது அமெரிக்க விவசாயிகளின் சுயமரியாதை, பொருளாதார வலிமை மற்றும் ஒரு முழுத்தொழிலையும் சீர்குலைத்த ஒரு சந்தை சரிவு பற்றியது. கடைகளில் குறைந்த விலையில் சீஸ் விற்கப்படுவதையும், சிறிய பண்ணைகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழப்பதையும் காணும்போது, ஒரு உண்மை தெளிவாகிறது: 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள பால் பொருட்கள் நிராகரிக்கப்பட்டதும், மார்க் கார்னியின் நடவடிக்கை அமெரிக்க விவசாயிகளை நிலைகுலைய செய்துள்ளது. மேலும் இது அமெரிக்க விவசாயத்தின் அடித்தளத்தையே அசைக்கும் ஒரு வர்த்தகப் போரின் தொடக்கமாகும்.
கனடாவின் நிலைப்பாடு
கனடாவின் பால் பண்ணைத் துறை, விநியோக மேலாண்மை அமைப்பு என்ற முறையின் கீழ் செயல்படுகிறது. இது உள்நாட்டு உற்பத்தி மற்றும் இறக்குமதியை கடுமையாக கட்டுப்படுத்துகிறது. இதன் காரணமாக, குறிப்பிட்ட இறக்குமதி ஒதுக்கீட்டை மீறும் பால் பொருட்களுக்கு கனடா அதிக வரி விதிக்கிறது. இந்த விதிகள் அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், அமெரிக்கா தனது ஒதுக்கீட்டை தாண்டியதால் கனடாவும் அதிக வரி விதித்துள்ளது. இதன் விளைவாகவே, அமெரிக்க விவசாயிகள் பால் பொருட்களை கீழே கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
