12 மாதங்களில் 10 கிலோ.. திடீரென எடை அதிகரித்த மார்பகங்கள்.. 22 வயது மாணவிக்கு ஏற்பட்ட சிக்கல்.. அதன்பின் என்ன நடந்தது?

  உலகில் மிக அரிதான நோய்கள் பல உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை குறித்து பலரும் கேள்விப்பட்டிருக்க கூட மாட்டோம், அப்படியொரு அரிதான நோய் பிரேசிலை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை பாதித்தது. அவரது மார்பகங்கள்…

breast

 

உலகில் மிக அரிதான நோய்கள் பல உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை குறித்து பலரும் கேள்விப்பட்டிருக்க கூட மாட்டோம், அப்படியொரு அரிதான நோய் பிரேசிலை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை பாதித்தது. அவரது மார்பகங்கள் திடீரென அதிவேகமாக வளர தொடங்கின. ஒரு சில மாதங்களிலேயே அவற்றின் எடை 12 கிலோவை எட்டியதால், அவர் மார்பக சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உலகில் சுமார் 300 பேர் மட்டுமே இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேசிலைச் சேர்ந்த 22 வயது ஆசிரிய பயிற்சி மாணவி தயனாரா மார்கொண்டஸ்க்கு திடீரென மார்பகங்கள் அளவுக்கு அதிகமாக வளர்ந்தது. அதாவது 12 மாதங்களில் அவரது மார்பகங்கள் சுமார் 10 கிலோ எடையாக மாறியது.

ஆரம்ப கட்டத்தில் அவர் நடுத்தர அளவிலான டி-ஷர்ட்களை அணிந்து வந்தார். ஆனால், அவரது மார்பகங்கள் ஒவ்வொரு மாதமும் சுமார் 750 கிராம் எடை கூடின. அவரது நிலை மோசமடையவே, வேறு எந்த ஆடைகளும் பொருந்தாததால், பிரத்யேகமாக தைக்கப்பட்ட ஆடைகளை அணிய வேண்டியிருந்தது.

அவரால் ப்ரா கூட அணிய முடியவில்லை, ஏனெனில் அவரது மார்பக சைஸ்க்கு பிராவே இல்லை. இதனால் அவருக்கு பீதி ஏற்பட்டது. ஆரம்பத்தில், மார்கொண்டஸ் இந்த மாற்றங்களை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், பொது இடங்களில் மக்கள் அவரை உற்று நோக்கத் தொடங்கியதும், அவருக்கு பதட்டம் அதிகரித்தது. ஒருமுறை அவர் ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்ற போது, மக்கள் நான் திருடிய பொருட்களை என் மார்பகத்திற்குள் மறைத்து வைத்திருப்பதாக நினைத்தார்கள். அப்போதுதான் ஏதோ பெரிதாகத் தவறு நடக்கிறது என்பதை அவர் உணர்ந்து சிகிச்சை பெற முடிவு செய்தார்.

அவரது வளர்ந்து வந்த மார்பகங்கள் அவரது அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்தன. அவருக்கு தொடர்ந்து முதுகு, தோள்கள் மற்றும் கழுத்தில் வலி ஏற்பட்டது. காலணிகள் அணிவது, ஓடுவது அல்லது ஜிம்மிற்கு செல்வது போன்ற செயல்பாடுகள் சாத்தியமற்றதாக மாறின. சில சமயங்களில் வலி மிகவும் தீவிரமாக இருந்ததால், அவர் சக்கர நாற்காலியை நம்பியிருக்க வேண்டியிருந்தது.

ஆரம்பத்தில், மருத்துவர்கள் அது புற்றுநோயாக இருக்கலாம் என்று அஞ்சினர். ஆனால், பின்னர் அவருக்கு ‘ஜிகாண்டோமாஸ்டியா’ (Gigantomastia) என்ற அரிய நோய் இருப்பதை கண்டறிந்தனர். இது மார்பகங்கள் அதிகப்படியாகவும், கட்டுப்படுத்த முடியாத வகையிலும் வளரும் ஒரு நிலையாகும். உலகளவில் இந்த நோய் 300 பேருக்கு மட்டுமே இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இது ஹார்மோன் சமநிலையின்மை உள்ளிட்ட சில காரணங்களால் ஏற்படலாம்.

மார்கொண்டஸின் நிலையை உணர்ந்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். மார்பகங்களில் உள்ள சுமார் 12 கிலோ திசுக்களை அகற்றினர். ஆக எட்டியிருந்தது. இந்த அறுவை சிகிச்சைக்கு, பொதுமக்களின் நன்கொடைகள் மூலம் சுமார் ₹6 லட்சம் கிடைத்தது. அறுவை சிகிச்சைக்கு பின் தற்போது மார்கொண்டஸ் நார்மலாக உள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இப்போது நான் கண்ணாடியில் என்னை பார்க்கும்போது, அது நான்தான் என்று என்னால் நம்ப முடியவில்லை. ‘நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன்!’ என்று நினைக்கிறேன். சில சமயங்களில் நான் மகிழ்ச்சியில் அழுகிறேன்,” என்று கூறினார் . இந்த அறுவை சிகிச்சை அவருக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை அளித்தாலும், திசுக்கள் மீண்டும் வளரக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அவரது நிலையை கண்காணிக்க அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.