2025-ஆம் ஆண்டு உலகெங்கும் பல்வேறு அதிரடி மாற்றங்களையும், இயற்கை சீற்றங்களையும், வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளையும் சந்தித்தது. இந்த ஆண்டின் முக்கிய 10 உலக நிகழ்வுகள்இதோ:
மெலிசா சூறாவளி : அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான ‘மெலிசா’ சூறாவளி, ஐந்தாம் நிலையை எட்டி ‘நூற்றாண்டின் பெரும் புயல்’ என்று அழைக்கப்பட்டது. இது கடலோரப் பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: 2025 ஜனவரியில் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ ஆயிரக்கணக்கானோரை வெளியேற்ற செய்தது. செயற்கைக்கோள் படங்கள் இதன் கோரத்தை உலகுக்கு காட்டின.
காசா போர்நிறுத்தம்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே அமெரிக்கா முன்னிலையில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. கைதிகள் மற்றும் பிணைக்கைதிகள் பரிமாற்றத்திற்கும் இதில் வழிவகை செய்யப்பட்டது.
வரலாற்றுச் சிறப்புமிக்க போப் தேர்வு: போப் பிரான்சிஸின் மறைவுக்கு பிறகு, சிகாகோவை சேர்ந்த கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் பிவோஸ்ட் புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப் இவரே.
லூவ் அருங்காட்சியக திருட்டு: உலகின் புகழ்பெற்ற பாரிஸ் லூவ் அருங்காட்சியகத்தில் நடந்த நகைத்திருட்டு, சர்வதேச அளவில் கலை பொருட்களின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியது.
புதிய கடல் உயிரினங்கள் கண்டுபிடிப்பு: அர்ஜென்டினா அருகே கடலுக்கு அடியில் நடத்தப்பட்ட ஆய்வில், இதுவரை கண்டறியப்படாத பல விசித்திரமான கடல்வாழ் உயிரினங்கள் கண்டறியப்பட்டன.
ட்ரம்ப் – ஜெலென்ஸ்கி மோதல்: உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இடையிலான அரசியல் விவாதங்களும், கருத்து மோதல்களும் உலக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின.
கே-பாப் அனிமேஷன் ஆதிக்கம்: நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியான கே-பாப் தொடர்பான அனிமேஷன் தொடர், உலகளவில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ஒரு கலாச்சார மாற்றத்தை ஏற்படுத்தியது.
ஏஐ சிற்பிகள்: ‘டைம்’ இதழ் 2025-ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக ‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியவர்களை’ தேர்ந்தெடுத்தது. இது தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியது.
அலெக்சாவிடம் கேட்கப்பட்ட கேள்விகள்: அமேசான் அலெக்சாவிடம் அதிகம் தேடப்பட்ட நபர்களாக டெய்லர் ஸ்விஃப்ட், கிறிஸ்டியானோ ரொனால்டோ, எலான் மஸ்க் மற்றும் மிஸ்டர் பீஸ்ட் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
