இந்த ஊழியர்கள் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, இது ஒரு ஒழுங்குமுறை மீறலாக கருதப்பட்டு அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று நிறுவனம் விளக்கமளித்தது. இந்த வேலை நீக்கம் குறித்து நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
Fannie Mae நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ப்ரிசில்லா அல்மோடோவர், “நெறிமுறையை மீறி மோசடியையும் ஏற்படுத்தும் யாரையும் வேலைக்கு வைத்து கொள்ள மாட்டோம் எனவும், எதிர்காலத்திலும் இந்த நடவடிக்கையை தொடர்வோம்,” என்று கூறினார். மொத்தமாக 700 ஊழியர்கள் இந்தப் பணி நீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 200 பேர் இந்திய-அமெரிக்கர்கள்.
தெலுங்கு சங்கங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உட்பட்டவர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்ட இந்திய-அமெரிக்கர்களில் பலர் அமெரிக்க தெலுங்கு சங்கங்கள் (TANA, ATA) உள்ளிட்ட அமைப்புகளுடன் நெருக்கமாக தொடர்புடையவர்கள். இதில் ஒருவர் TANA-வின் துணைத் தலைவர் பதவியிலும், மற்றொருவர் ATA-வின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளனர்.
இந்த ஊழியர்கள் பொது நலனுக்கான அமைப்புகளுடன் சேர்ந்து போலியான நன்கொடைகளை உருவாக்கி, Fannie Mae நிறுவனத்தின் ‘matching grants program’ மூலமாக நிதியை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இத்திட்டம், ஊழியர் கொடுக்கும் தொகையை நிறுவனம் ஒப்புமையாக வழங்கும் ஒரு நன்கொடை திட்டமாகும். ஆனால், போலியான தகவல்கள் மூலம் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கு முன்பு, 2025 ஜனவரியில் Apple நிறுவனமும் தனது ‘Matching Gifts Programme’ ஐ தவறாக பயன்படுத்தியதற்காக 100-க்கும் மேற்பட்ட ஊழியர்களை, அதில் இந்தியர்களும் உள்ளடங்கிய வகையில், வேலை நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.