அழகோடு வந்த ஆபத்து.. AI- உருவாக்கிய பெண்மீது காதல்.. உயிரை மாய்த்த சிறுவன்..

உலகம் முழுக்க AI-ன் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இறந்தவர்களைக் கூட மெய்நிகரில் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி ஆச்சர்யப் பட வைக்கிறது. விஞ்ஞான வளர்ச்சி மூலம் AI-ஆல் பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை…

Game of Thrones

உலகம் முழுக்க AI-ன் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இறந்தவர்களைக் கூட மெய்நிகரில் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி ஆச்சர்யப் பட வைக்கிறது. விஞ்ஞான வளர்ச்சி மூலம் AI-ஆல் பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. இதனால் பல நிறுவனங்களில் வேலை இழப்பு தொடர்கதையாகி வருகிறது. இது போதாது என்று AI மூலம் உருவாக்கப்படும் கற்பனைகளை நிஜம் என்று நம்பி அதோடு உறவாடி மன வியாதிக்கும் ஆட்பட்டு வருகின்றனர். AI -ஆல் உருவாக்கப்பட்ட ஆண்களைத் திருமணம் செய்வது, AI செய்தி வாசிப்பாளர், தொகுப்பாளர் என அனைத்தும் AI ராஜ்ஜியமாகி விட்டது.

கற்பனைக்கும் எட்டாத நிஜமாகவே உள்ள பெண்கள் போல் AI உருவாக்கி வருவதால் நிஜம் எது கற்பனை எது என்று வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்குக் கூட தத்ரூபமாக உள்ளது. இந்நிலையில் இப்படி AI உருவாக்கிய ஒரு கதபாத்திரத்தைக் காதலித்து பின் கிடைக்காமல் போனதால் தன் உயிரை மாய்த்திருக்கிறான் ஒரு சிறுவன்.

விசில் பட விவேக் காமெடி போல் விலங்குகளின் மனநிலை அறியும் தொழில்நுட்பம்..பன்றிக்குப் பொருத்தி சோதனை

அமெரிக்காவில் GAME OF THRONES என்ற வெப்சீரிஸ் வெகு பிரபலமாக ஒளிபரப்பாகிறது. இதற்கு ரசிகர்கள் அதிகம். இத்தொடரில் வரும் DANY என்ற கதாபாத்திரத்தின் பெண் மீது புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் காதல் கொண்டுள்ளான். இந்தக் கதாபாத்திரம் AI-Chat Gptஆல் உருவாக்கப்பட்டது. தான் காண்பது நிஜமல்ல என்பதை அறியாத அந்த சிறுவன் தினமும் அந்த DANY கதபாத்திரத்துடன் உரையாடுவதை வழக்கமாகக் கொண்டு நாளடைவில் காதல் வயப்பட்டிருக்கிறான்.

ஒருகட்டத்தில் பிரச்சினை எல்லை மீற, நிஜ உலகினை வெறுத்துள்ளான் அச்சிறுவன். இதனால் அவனுக்கு மன அழுத்தம் அதிகமானது. இந்த சூழலில் தனக்கு DANY கிடைக்க மாட்டாள் என்பதை உணர்ந்த போது அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.