இதுவரை, “நிலவுகளின் அரசன்” என்ற பட்டம் வியாழனுக்கே சொந்தமாக இருந்தது. ஆனால் தற்போது, சனியின் மொத்த நிலவு எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது. இது மற்ற அனைத்து கிரகங்களின் நிலவுகளின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு ஆகும்.
2023ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிலவு கண்டுபிடிப்பு ஆராய்ச்சியில் தற்போது தான் புதிய மைல்கல் கிடைத்துள்ளது. கனடா-பிரான்ஸ்-ஹவாய் தொலைநோக்கியை பயன்படுத்தி 62 சனி கிரகத்திற்கான நிலவுகளை முதலில் கண்டறிந்த இந்த குழு மேலும் பல நிலவுகள் இருக்கக்கூடும் என யூகித்து கூடுதல் ஆய்வு செய்ததில் தற்போது 128 நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நாங்கள் சனி கிரகத்திற்கான 128 புதிய நிலவுகளை கண்டுபிடித்துள்ளோம். எங்கள் கணிப்புகளின் படி, இனி வியாழன் எப்போதும் சனியை முந்திவிட வாய்ப்பே இல்லை” என இந்த குழுவில் உள்ள ஒருவர் கூறியுள்ளார்.