110 அடி விட்டம்.. மணிக்கு 27,907 வேகத்தில் வரும் விண்கல்.. பூமிக்கு ஆபத்தா?

  மார்ச் 23ஆம் தேதி இரவு 9:24 மணிக்கு பூமிக்கு மிக அருகில் DA15 எனும் விண்கல் வரவுள்ளதாகவும், ஒரு விமானத்தின் அளவுள்ள விண்கல் குறித்து NASA எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. பூமியில்…

steroid

 

மார்ச் 23ஆம் தேதி இரவு 9:24 மணிக்கு பூமிக்கு மிக அருகில் DA15 எனும் விண்கல் வரவுள்ளதாகவும், ஒரு விமானத்தின் அளவுள்ள விண்கல் குறித்து NASA எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. பூமியில் இருந்து 6,480,000 கிலோமீட்டர் தூரத்தில் தான் இந்த விண்கல் கடக்கும் என்றாலும், மிகுந்த வேகத்தில் பயணிப்பதால், பூமிக்கு ஆபத்து ஏற்படுமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

விண்கல் DA15 110 அடியில் விட்டம் கொண்டதாக உள்ளது மற்றும் இது மணிக்கு 27,907 கிமீ வேகத்தில் பயணிக்கும் இந்த விண்கல் ஆபத்தானது என்று நாசா தெரிவித்துள்ளது.
உலகளவில் உள்ள வான்காணிப்பு நிலையங்களுடன் இணைந்து நாசா இந்த விண்கல் இயக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும், Goldstone Radar போன்ற மேம்பட்ட கருவிகள் மூலம் விண்கல் பாதையை துல்லியமாக கணித்து சில எச்சரிக்கைகளை வழங்க திட்டமிட்டுள்ளது.

DA15 விண்கல் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தால், 2013 ஆம் ஆண்டு Chelyabinsk நகரத்தில் நிகழ்ந்த விண்கல் வெடிப்பு போன்ற இடைக்கால அழிவுகளை ஏற்படுத்தலாம். அந்த சம்பவத்தில் பலமான அதிர்வால் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆனால், 2025 DA15 பூமிக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படுத்தாது, இது பாதுகாப்பாக கடந்து செல்லும் என இப்போதைய நிலையில் கணிக்கப்பட்டுள்ளது.

2025 DA15 விண்கல் பூமியை தாக்காது என்றாலும், நாசா மற்றும் பிற விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் பூமிக்கு அருகே வரும் விண்கற்களை கண்காணித்து, எந்தவித அபாயமும் ஏற்படாமல் முன்னெச்சரிக்கைகளை வழங்க உறுதி செய்துள்ளன.