நிலத்தில் தோண்டி பார்த்ததும் உள்ளே இருந்த அற்புதம்.. ஒரே நாளில் வாலிபரின் வாழ்க்கையை திருப்பி போட்ட சம்பவம்..

By Ajith V

Published:

பழமை வாய்ந்த பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதற்கு எப்போதுமே மவுசு இருக்கும். உதாரணத்திற்கு முந்தைய ராஜாக்கள் பயன்படுத்திய பொருட்கள் ஏலத்திற்கு வருவதுடன் எதிர்பார்த்ததை விட லட்சம், கோடி என ஏலத்திற்கு போய் பலரையும் சொக்க வைக்கும். அவை மிக அரிதான பொருட்கள் என்பதால் தங்களுடன் இருக்கும் போது ஒரு மதிப்பு இருக்கும் என்பதால், அதனை வாங்கிக் கொள்ள செல்வந்தர்கள் பலரும் போட்டி போட்டுக் கொள்வார்கள்.

இதனால், நூறாண்டு பழமை வாய்ந்த பொருட்கள் கிடைத்தாலே அது பெரிய பொக்கிஷமாக தான் பார்க்கப்படும். அப்படி ஒரு சூழலில் தான், UK பகுதியை சேர்ந்த ஒருவருக்கு உலோகத்தை கண்டுபிடிக்கும் கருவி மூலம் கிடைத்த பொருள் தொடர்பான தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

நிறைய நாணயங்களை சேகரித்து இது தொடர்பாக தனது டிக் டாக் தளத்தில் வீடியோ பகிர்ந்து வாடிக்கையாக ஒரு நபர் கொண்டுள்ளார். அவர் சமீபத்தில் கண்டுபிடித்த நாணயங்கள் தொடர்பாக சில ஆச்சரியமான தகவல்களையும் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான தகவலின் படி, அவர் கண்டெடுத்தது 1905 ஆம் ஆண்டு தயார் செய்யப்பட்ட Half Crown என்ற நாணயங்கள் என தெரிகிறது. அந்த சமயத்தில் மொத்தமே 166,008 நாணயங்கள் தான் தயாரிக்கப்பட்டிருந்தது. அப்படி அரிதான நாணயங்களில் ஒன்றைத் தான் அந்த நபர் கண்டெடுத்துள்ளார். மேலும் இதில் கிடைத்த நாணயங்கள் மூலம் 48,000 ரூபாய் மூலம் 10 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டது தான் பலரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது.

மேலும் அது சற்று மோசமான நிலையில் இருந்தால் கூட ஏறக்குறைய 2 லட்ச ரூபாய்க்கு மேல் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கூட பல விதமான கருத்துக்களை இந்த வீடியோவின் கீழ் குறிப்பிட்டு வருகின்றனர். முன்பு எல்லாம் தங்கள் கையில் இருக்கும் பொருட்களை இது போன்று ஏதாவது தரையில் புதைத்து வைப்பதுடன் பின்னாளில் அதை தோன்றி எடுக்காமலே போய் விடுகின்றனர்.

இப்படிப்பட்ட பொருட்கள் தான் பல நூறு ஆண்டுகள் கழித்து பொக்கிஷமாக மாறுவதுடன் இது போன்று சிலரின் வாழ்நாளில் பெரிய திருப்புமுனையையும் கூட ஏற்படுத்தும். அப்படிப்பட்ட ஒரு தருணம் தான் அந்த நபருக்கு உருவாகி லட்சாதிபதியாக மாற்றி உள்ளது. இதை பார்க்கும் பலரும் இது போன்று எங்களுக்கும் பழைய நாணயங்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும் என ஜாலியாக கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர்.