அடர்ந்த காட்டுக்குள் 8 வயது சிறுவன் செய்த வேலை.. உயிர் பிழைத்தது எப்படி தெரியுமா?

டிஸ்கவரி சேனலில் பிரபலமாக ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியான மேன் vs வைல்டு நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. உலகின் நம்.1 ரியாலிட்டி ஷோவாக விளங்கும் Man vs Wild நிகழ்ச்சியில் Bear Gryllis சாசகத்தினைக்…

Zimbawe Boy

டிஸ்கவரி சேனலில் பிரபலமாக ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியான மேன் vs வைல்டு நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. உலகின் நம்.1 ரியாலிட்டி ஷோவாக விளங்கும் Man vs Wild நிகழ்ச்சியில் Bear Gryllis சாசகத்தினைக் காண்பதற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

உலகிலுள்ள முக்கியப் பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர். உயிர் வாழ முடியாத சூழலில் இருக்கும் பொருட்களைக் கொண்டு எப்படி உயிர்வாழ்வது என்றும், இக்கட்டான சூழலில் மாட்டிக் கொள்ளும் போது தப்பிப்பது எப்படி என்றும் இந்த நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸ் செய்து காட்டும் போது உடலே புல்லரிக்கும்.

இந்நிகழ்ச்சியைப் போலவே நிஜத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதுவும் 8 வயது சிறுவனுக்கு. ஜிம்பாவே நாட்டைச் வடக்குப் பகுதியிலுள்ள மட்டுசடோனா தேசிய பூங்கா வனப்பகுதி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் டினோடெண்டா அங்குள்ள காட்டுப் பகுதி அருகில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் வழிதவறி காட்டுக்குள் சென்றிருக்கிறான். சிங்கம், புலி உள்ளிட்ட ஆபத்தான காட்டு விலங்குகள் வாழும் இந்தக் காட்டில் சிறுவன் 5 நாட்களாக சிக்கிக் கொண்டுள்ளான்.

அஜீத் ஏன் நான் கடவுள் படத்துல நடிக்கல தெரியுமா? சீக்ரெட் உடைத்த இயக்குநர் பாலா

அப்போது காட்டில் அங்கு கிடைத்த பழங்கள் மற்றும் மரக்குச்சிகளின் உதவியால் நிலத்தைத் தோண்டி நீர் ஆகியவற்றை உண்டு வாழ்ந்துள்ளார். சிறுவனைக் காணாத பெற்றோர் வனத்துறையிடம் தெரிவிக்க அவர்களின் தீவிர தேடுதலுக்குப் பின் வனப்பகதியில் 50 கி.மீ-க்கு அப்பால் 5 நாட்களுக்குப்பிறகு உமே நதியின் துணை நதி அருகே உயிருடன் மீட்கப்பட்டான்.

மிகவும் சோர்ந்து வறண்டு காணப்பட்ட சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுவனின் இந்த சாமர்த்திய செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.