YouTube ஒரு புதிய அம்சத்தை சோதனை செய்து வருவதாகவும், அந்த அம்சம் Premium பயனர்களுக்கு தங்களது அடுத்த வீடியோவை தேடாமல் நேரடியாக கண்டுபிடிக்க உதவக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய முயற்சி பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்களை தானாகவே playback queue-வில் சேர்க்கும். அதாவது, நீங்கள் எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களோ அதனை அடிப்படையாகக் கொண்டு YouTube உங்கள் அடுத்த வீடியோவைத் தேர்வு செய்யும்.
தொடர்ச்சியான வீடியோக்களை பார்வையிட விரும்பும் பயனர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் அடுத்த வீடியோவை தேர்வு செய்யும் பணி முழுவதுமாக YouTube கையில் இருக்கும் நிலையில் இந்த வசதி தேடுதலை எளிமையாக்கும்..
இந்த அம்சம் YouTube சோதனை திட்டத்தில் இருப்பதாகவும் தற்போது Premium சந்தாதாரர்கள் இதனை சோதித்து பார்க்க முடியும் என்றும், ஆனால் தற்போதைக்கு Android சாதனங்களில் மட்டுமே இந்த வசதி உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 7ஆம் தேதி வரை இந்த சோதனை முயற்சி இயங்கும் என்றும், சில iPhone பயனர்களும் இதைப் பயன்படுத்த முடியும் என்றும் YouTube தெரிவித்துள்ளது.
நீங்கள் ஒரு Premium பயனர் ஆக இருந்தால், இந்த அம்சத்தை சோதனை செய்து முயற்சிக்கலாம். இதற்கு settings சென்று Try experimental new features என்பதைத் தேர்வு செய்யவும். பின்னர், “Recommended videos in Premium Queue” பகுதியில் “Try it out” என்பதை தேர்ந்தெடுத்து அதை செயல்படுத்திய பிறகு, YouTube உங்கள் பார்வை வரிசையில் வீடியோக்களை தானாகச் சேர்க்கும், அதனால் நீங்கள் தானாக புதிய வீடியோக்களைத் தேர்வு செய்ய தேவையில்லை.
இந்த வசதி காரணமாக YouTube பயனர்கள் அதிகளவில் Premium வெர்ஷனுக்கு மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.