YouTube நிறுவனம் இந்த மாதம் முதல் அதன் ‘Trending’ பக்கத்தை அனைத்து பயனர்களுக்கும் நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் அடுத்த சில வாரங்களில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘Trending’ பக்கத்துடன், ‘Trending Now’ பகுதியும் நீக்கப்பட்டு, பயனர்களின் தற்போதைய ரசனைகள் மற்றும் பயன்பாட்டு முறைகளுக்கு ஏற்ப, வகை சார்ந்த புதிய பட்டியல்களை YouTube அறிமுகப்படுத்த உள்ளது.
பயனர்களுக்காக ‘Trending’ பக்கத்தை YouTube அறிமுகப்படுத்தி 10 ஆண்டுகள் ஆன நிலையில், இப்போது ஒரு புதிய அம்சத்திற்கு வழிவிட்டு, அது நிரந்தரமாக நீக்கப்படுகிறது.
‘Trending’ பக்கம் நீக்கப்பட்ட பிறகு, YouTube என்ன செய்யப் போகிறது? பயனர்கள் அடுத்து என்ன பார்ப்பார்கள்? என்ற கேள்வி பலருக்கு எழலாம். YouTube ‘Trending Music Videos’, ‘Weekly Top’ , ‘Podcast Shows’ , மற்றும் ‘Trending Movie Trailers’ போன்ற புதிய வகைகளை சேர்க்கிறது. இது இப்போதைக்கு தான். YouTube எதிர்காலத்தில் மேலும் பல பிரிவுகளை வழங்கும். எனவே YouTube பயனர்கள் தங்களது விருப்பத்திற்குரிய பிரிவுகளை மறுபரிசீலனை செய்யவும், ஏற்கனவே பில்லியன்களில் இருக்கும் பார்வையாளர்களை வீடியோக்களை பார்க்கவும் தூண்டும்.
பிரபலமான உள்ளடக்கத்தை கண்டறிய ஒரு குறிப்பிட்ட பகுதி தேவையில்லை என்பதை YouTube இறுதியாக உணர்ந்துள்ளது. மக்கள் வெறுமனே தேடல் பகுதிக்கு சென்று மற்றவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதை அறிந்து, அதை பார்க்கத் தொடங்கலாம். ‘Shorts’ உள்ளடக்கமும் பார்வையாளர்கள் மற்றும் தேவை அளவில் வளர்ந்துள்ள நிலையில், YouTube இந்த வடிவத்தில் மேலும் பல அம்சங்களை வழங்க கவனம் செலுத்தி வருகிறது.
‘Trending’ பகுதிக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதையும் YouTube கவனித்தது. இதனால் தான் இந்த முடிவை அதிரடியாக எடுத்துள்ளது. YouTube Studioவில் உள்ள ‘Inspiration’ டேப் மூலம், புதிய யோசனைகள் மற்றும் பிரபலமான வீடியோக்கள் பற்றி கிரியேட்டர்கள் புதுப்பித்துக் கொள்ளலாம். இதன் மூலம் நல்ல கிரியேட்டர்கள் மீது கவனம் செலுத்தும்.
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களுக்கு மேலும் பல அம்சங்களை வழங்கவும், ஏற்கனவே உள்ள உள்ளடக்கத்தை அதன் AI அமைப்புகளுக்கு பயிற்சி அளிக்கவும் YouTube திட்டமிட்டுள்ளது. எனவே YouTubeல் வருங்காலத்தில் இன்னும் சில புதிய மாற்றங்கள் ஏற்படலாம்.