தொலை தொடர்புத் துறையில் நாள்தோறும் எண்ணற்ற மொபைல் போன்கள் சந்தைக்கு வருகின்றன. சாதாரண லேண்ட்லைன் தொலைபேசியில் ஆரம்பித்த தொழில்நுட்பம் இன்று கையடக்க மொபைல் போன்களில் உலகையே கைக்குள் அடக்கி விட்டது. மொபைல்போன்களைப் பொறுத்தவரை தினந்தோறும் பல்வேறு அப்டேட்களுடன் புதுப் புது மாடல்களில் சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றன. பயனர்களும் ஆர்வமுடன் அதனை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். தற்போது AI தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் மொபைல் போன்கள் வந்துவிட்டன.
சாதாரணமாக மொபைல் போன்கள் என்றாலே Flip Type மாடல்கள் அதிகம் வந்தன. அதன்பின் Double Fold மொபைல்கள் அடுத்து வந்தன. இதனால் அகலமான திரை மற்றும் பிரௌசிங், வீடியோ பார்க்கும் அனுபவம் ஆகியவை மேம்பபடுத்தப்பட்டது. தற்போது சீனாவில் மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஹுவாய் கம்பெனி மூன்று முறை மடிக்கும் விதமாக டிரிப்பிள் ஃபோல்டு மொபைல் போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளன.
Realme Narzo 70 Turbo 5G இந்தியாவில் அறிமுகமானது… விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ…
Tri Fold வடிவில் Mate XT என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த மொபைல் சாதாரண மொபைல் போன்களைக் காட்டிலும் 10.2 இன்ச் திரையைக் கொண்டுள்ளது. மேலும் சார்ஜிங்கைப் பொறுத்தவரை 5600 mAh திறனுள்ள பேட்டரியைக் கொண்டிருக்கிறது. 16 GB RAM செயல்திறனுடன் 500GB மற்றும் 1TB சேமிப்பைக் கொண்டுள்ளது Mate XT Tri Fold மொபைல் போன்.
கேராவைப் பொறுத்த வரை 50 Mega Pixel முதன்மைக் கேமரா மற்றும் 12 மெகா பிக்சல் அகலமான லென்ஸ் மற்றும் 12 மெகா பிக்சல் periscope lens ஆகியவற்றுடன் 5.5 Zoom வசதியை அளிக்கிறது. இதுமட்டுமன்றி இந்த போனை Z வடிவில் மாற்றி வைத்துக் கொள்வது தான் இதன் சிறப்பம்சமே.
விலையைப் பொறுத்தவரை தற்போது 2,36,048 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த போன் செப்டம்பர் 20 முதல் கிடைக்கிறது. எனினும் மற்ற நாடுகளில் அறிமுகப்படுத்துவது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.