WhatsApp-இல் மோஷன் புகைப்படங்களை பகிரும் வசதி.. இனி அனிமேஷனும் அனுப்பலாம்..!

  WhatsApp பயனர்கள் சாட்களில், குழுக்களில் மற்றும் சேனல்களில் மோஷன் புகைப்படங்களை பகிரக்கூடிய புதிய வசதியை உருவாக்கி வருகிறது. தற்போது இந்த வசதி Android 2.25.8.12 என்ற WhatsApp-இன் சமீபத்திய பீட்டா பதிப்பில் உள்ளது.…

Whatsapp

 

WhatsApp பயனர்கள் சாட்களில், குழுக்களில் மற்றும் சேனல்களில் மோஷன் புகைப்படங்களை பகிரக்கூடிய புதிய வசதியை உருவாக்கி வருகிறது. தற்போது இந்த வசதி Android 2.25.8.12 என்ற WhatsApp-இன் சமீபத்திய பீட்டா பதிப்பில் உள்ளது.

மோஷன் புகைப்படங்கள் என்பது, ஒரு புகைப்படத்தை எடுக்கும் முன் மற்றும் பின் சில விநாடிகள் வரை உள்ள இயக்கத்தைக் பதிவுசெய்வது. இதன் மூலம், ஒரு மேம்பட்ட மீடியா பகிர்வு அனுபவம் கிடைக்கிறது.

Samsung Galaxy, Google Pixel, Apple iPhone போன்ற சாதனங்களில் ஏற்கனவே இந்த வசதி உள்ளது. iOS-ல், இது Live Photos என அழைக்கப்படுகிறது. ஏற்கனவே WhatsApp-இல் Apple சாதனங்களுக்கு இந்த வசதி இருக்கும் நிலையில் தற்போது Android மொபைலிலும் மோஷன் புகைப்படங்களை இனிமேல் பகிர முடியும்.

இந்த வசதியில் கேலரி பிரிவில் ஒரு புதிய ஐகான் இருக்கும். இதன் மூலம், பயனர்கள் மோஷன் புகைப்படத்தை தேர்வு செய்து அனுப்பலாம். பயனர்கள் இதை அனுப்பினால், பெறுநர்கள் தங்கள் சாதனத்தில் மோஷன் புகைப்படத்தை அனிமேஷன் வடிவில் பார்க்க முடியும்.

இந்த வசதி சோதனை அடிப்படையில் உள்ளது. எனவே பீட்டா பயனர்களுக்கு கூட இது இன்னும் கிடைக்கவில்லை. WhatsApp இதை எப்போது வெளியிடும் என்பதை இதுவரை அறிவிக்கவில்லை. இருப்பினும், இது சாட்கள், குழுக்கள் மற்றும் சேனல்களில் விரைவில் செயல்பட எதிர்பார்க்கப்படுகிறது.