வாட்ஸ் அப் அவ்வப்போது தனது பயனர்களுக்கு புதிய அம்சங்களை கொண்டு வரும் நிலையில், தற்போது “இமேஜ் சியர்ச் ஆப்ஷன்’ என்ற புதிய வசதியை கொண்டு வந்துள்ளது. இது பயனர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சில பீட்டா பயனர்களுக்கு மட்டும் கிடைக்கும் இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“இமேஜ் சியர்ச்’ என்று அழைக்கப்படும் இந்த அம்சம், மற்ற சியர்ச் அம்சம் போலவே செயல்படும் என்றும், குறிப்பாக ஒரு இமேஜின் உண்மை தன்மையை தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை செயல்படுத்த, உங்கள் வாட்ஸ் அப்பில் வரும் புகைப்படத்தை ஓபன் செய்து, பின்னர் வலது பக்கத்தில் உள்ள மூன்று புள்ளிகளை அழுத்தி Search on web என்பதை தேர்வு செய்யவும். ஒரு பாப் அப் விண்டோ தோன்றியவுடன், அதில் தோன்றும் சியர்ச் என்ற ஆப்ஷனை அழுத்தினால், கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலை தொடங்கும்.
இந்த அம்சம், உங்கள் இமேஜை கூகுளுக்கு அனுப்பி இணையத்தில் பொருத்தமான படங்களை தேடும் வகையில் செயல்படுகிறது. இதன் மூலம் உங்களுக்கு வந்த இமேஜின் உண்மை தன்மையை அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம், நமக்கு வந்த இமேஜின் முழு விவரத்தையும் அறிந்து கொள்ளலாம். இது மட்டுமின்றி, தேவையில்லாத இமேஜாக இருந்தால் அதை டெலிட் செய்யவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட கூகுள் இமேஜ் தேடலை போலவே இந்த அம்சம் செயல்படுகிறது, ஆனால் வாட்ஸ் அப்பில் இருந்தே இதனை நாம் தெரிந்து கொள்ள முடியும். .
தற்போது இந்த அம்சம் சில ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது, ஆனால் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்படும் என்றும் வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.