ஸ்டிகனோகிராபி மூலம் வாட்ஸ் அப்பில் ஒரு இமேஜை டவுன்லோடு செய்ததால் ரூ.2 லட்சத்தை பிரதீப் ஜெயின் என்பவர் இழந்துள்ளார்.
மக்களை ஏமாற்ற புதிய வழிகளை நோக்கி திரும்பும் மோசடிக்காரர்கள் யோசித்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஸ்டிகனோகிராபி (Steganography) எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இதன்படி, ஸ்டிகனோகிராபி தொழில்நுட்பத்தின் மூலம் பிரதீப் ஜெயின் என்ற நபரிடம் இருந்து ₹2.01 லட்சம் மோசடிக்காரர்கள் திருடியுள்ளனர். இந்த மோசடி, வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்ட ஒரு புகைப்படத்தின் மூலம் நடந்துள்ளது.
28 வயதான பிரதீப் ஜெயினுக்கு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்புக்கு பிறகு, ஒரு முதியவரின் புகைப்படம், “Do you know this person?” என்ற வாசகத்துடன் அவருக்கு அனுப்பப்பட்டது.
முதலில், ஜெயின் இந்த அழைப்புகளை கவனிக்கவில்லை. ஆனால் பலமுறை அழைப்புகள் வந்ததால், இறுதியில் அந்த புகைப்படத்தை அவர் டவுன்லோடு செய்தார். புகைப்படம் டவுன்லோடு செய்யப்பட்ட சில நிமிடங்களில், ஹைதராபாதில் உள்ள ஏடிஎம் ஒன்றிலிருந்து அவரது கணக்கிலிருந்து ₹2.01 லட்சம் பணம் எடுக்கப்பட்டதாக எஸ்.எம்.எஸ் அவரது மொபைலுக்கு வந்துள்ளது.
பிரதீப் செய்த டவுன்லோடில் இருந்து மோசடியாளர்கள் அவருடைய குரலை ரிக்கார்ட் செய்து, பண பரிவர்த்தனையை வங்கி அதிகாரிகள் உறுதிப்படுத்த முயன்றபோது, மோசடிக்காரர்கள் ஜெயினின் குரலை போல ஒத்த குரலை பயன்படுத்தி உறுதிப்படுத்தலை சமாளித்து மோசடி செய்துள்ளனர்.