அடேங்கப்பா..! முரட்டு அப்டேட் கொடுத்த ஸ்விக்கி.. இனி இதெல்லாம் ஆன்லைன் மயம் தான்..

By John A

Published:

உங்க வீட்டு குழாய்ல தண்ணீர் வரலையா? வீட்டில் மின் சாதனங்கள் சரிவர வேலை செய்யவில்லையா? அப்போ எடுத்தவுடனே பிளம்பர், எலக்ட்ரிஷியனைத் தான் கூப்பிடுவீங்க.. இனி சரியான பிளம்பர், எலக்ட்ரீஷியனைத் தேடி அலைய வேண்டாம். இதுவரை உணவுப் பொருட்களை டெலிவரி செய்து வந்த ஸ்விக்கி, சொமேட்டா போன்ற ஆன்லைன் வர்த்தக செயலிகளின் அடுத்த பிளான் என்ன தெரியுமா? ஆன்லைனிலேயே பிளம்பர், எலக்ட்ரீஷியன் ஆகியோரை புக் செய்து கொடுப்பது தான்.

நாளுக்கு நாள் எல்லாமே ஆன்லைன் மயமாகி விட்ட வேளையில் மக்களின் வேலையை எளிதாக்கும் வகையிலும், அதே சமயம் விருப்பத்திற்கிணங்க தேர்வு செய்து கொள்ளும் வகையிலும் மக்களுடன் மொபைல் ஆப்ஸ் கள் பிண்ணிப்பிணைந்து விட்டது. தற்போது வாட்ஸ் ஆப் மூலம் திருமணம், நிச்சயம் ஏன் உலகின் ஏதோ ஓர் மூலையில் இருக்கும் மருத்துவர் மறுமூலையில் இருக்கும் நோயாளிக்கு இணையவழியே சிகிச்சையே மேற்கொண்டு வருகின்றனர். இப்படி உலகத்தினை கைக்குள் அடக்கிய இணைய சேவை நிறுவனங்களின் அடுத்த டார்கெட்டாக நுழைவது தான் சேவைப் பணியாளர்களை ஆன்லைனில் புக் செய்வது.

23 கோடிக்கு ஏலம் போன எருமை.. இருந்தும் உரிமையாளர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்

ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற நிறுவனங்கள் உணவுகள், உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்களைத் தொடர்ந்து அடுத்ததாக பிளிங்கிட் செயலி மூலம் உடற்பயிற்சியாளர், ஜோதிடர் ஆகியோரை ஆன்லைனில் புக் செய்யும் வகையில் மேம்படுத்தியுள்ளது. மேலும் பிளம்பர், எலக்ட்ரீஷியன் போன்றோரையும் ஆன்லைனிலேயே புக் செய்யும் நடைமுறையும் விரைவில் வர உள்ளது. இந்த வசதி வரும் பட்சத்தில் நமக்குத் தேவைக்கேற்ப விரும்பிய பட்ஜெட்டில் சேவைப் பணியாளர்களை புக் செய்து தங்களுடைய பணிகளை மேற்கொள்ளலாம்.